"தளபதி ஸ்டாலின்" … மீண்டும் திமுக ஆட்சிதான்… OPS நம்பிக்கை..!!!
திமுகவில் இணைந்துள்ள ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
தமிழ்நாடு அரசியலில் இன்று ஒரு மிகப்பெரிய, எதிர்பாராத திருப்பம் நிகழ்ந்திருக்கிறது. முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் மூத்த தலைவருமான ஓ. பன்னீர்செல்வம், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துவிட்டார். அண்ணா அறிவாலயத்தில் நடந்த இந்த நிகழ்வு, தமிழக அரசியல் களத்தை முற்றிலும் புரட்டிப்போட்டிருக்கிறது.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் நிலையில் ஓ பன்னீர்செல்வம், அவரது மகன் ரவீந்திரநாத் மற்றும் ஓபிஎஸ் ஆதரவு எம் எல் ஏ ஐயப்பன் ஆகியோர் திமுகவில் இணைந்தனர். இந்த சம்பவம் அரசியலில் பெரும் முனையாகவே அமைந்துள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலினை தளபதி என குறிப்பிட்டு சிறப்பான ஆட்சியை முதலமைச்சர் ஸ்டாலின் நடத்தி வருவதாக ஓ பன்னீர்செல்வம் தெரிவித்தார். அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார் என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டில் மீண்டும் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி அமையும் என்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்தார்.
இதையும் படிங்க: #BREAKING: அறிவாலயத்தில் அம்மா விசுவாசி..! முதலமைச்சர் முன்னிலையில் OPS திமுகவில் ஐக்கியம்..!!
மனமகிழ்ச்சியுடன் திமுகவில் இணைந்து இருப்பதாகவும் ஓபிஎஸ் கூறினார். அண்ணா மற்றும் கலைஞர் வழியில் ஆட்சி செய்யும் திமுகவில் இணைத்திருப்பதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சர்வாதிகாரி போல் செயல்படுவதாகவும் குறிப்பிட்டார். இனி எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் ஆட்சி அமைக்க கூடாது என்பதற்காக திமுகவில் இணைந்து இருப்பதாக தெரிவித்தார். இது சுயமாக சிந்தித்து எடுத்த முடிவு என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: செம டிவிஸ்ட்... திமுகவில் ஐக்கியம்..!! ஒரே காரில் OPS, சேகர்பாபு பயணம்..!!