×
 

எதிர்பார்த்த மதிப்பெண்கள் வராததால் ஏமாற்றம்!! விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 1.6 லட்சம் பேர் விண்ணப்பம்! CBSE தகவல்!

விடைத்தாள் மறுமதிப்பீடு உள்ளிட்ட தேர்வுக்கு பிந்தைய சேவைகளுக்கு, 1.6 லட்சம் மாணவர்கள் விண்ணப்பத்துள்ளதாக சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்திய பிளஸ்-2 தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காததால், 1.6 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விடைத்தாள் மறுமதிப்பீடு உள்ளிட்ட தேர்வுக்குப் பிந்தைய சேவைகளுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

நாடு முழுவதும் இந்த ஆண்டு 18 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பிளஸ்-2 தேர்வை எழுதினர். இம்முறை ‘ஆன் ஸ்கிரீன் மார்க்கிங்’ (OSM) முறையில் கணினி திரை வாயிலாக விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டன. தேர்வு முடிவுகள் வெளியானபோது, பல மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறாததால் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இதையடுத்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சி.பி.எஸ்.இ.க்கு தொடர்ந்து முறையிட்டனர்.

இதைத் தொடர்ந்து, மாணவர்களின் விடைத்தாள்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மறுமதிப்பீடு, விடைத்தாள் பார்வையிடல் உள்ளிட்ட சேவைகளை வழங்க சி.பி.எஸ்.இ. முடிவு செய்தது. இதற்கென தனி இணையதளப் பக்கம் உருவாக்கப்பட்டது.

இதையும் படிங்க: பிளஸ்-2 விடைத்தாள் பிரச்சினைக்கு நிவாரணம்: மறுமதிப்பீட்டு விண்ணப்பம் இன்றுடன் நிறைவு..!!

இந்தச் சேவைக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. கடந்த 2-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை நடைபெற்ற விண்ணப்ப காலக்கெடுவில் 1.6 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் 3.8 லட்சத்திற்கும் மேற்பட்ட விடைத்தாள்கள் தொடர்பான கோரிக்கைகளை வெற்றிகரமாக சமர்ப்பித்துள்ளனர். தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் ஐ.ஐ.டி. குழுவினரின் மேற்பார்வையில் இணையதளம் சீராக இயங்கியதாக சி.பி.எஸ்.இ. தெரிவித்துள்ளது.

எனினும், சில மாணவர்கள் தங்கள் பதிவு எண்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை, விடைத்தாள்கள் தெளிவாக இல்லை, தங்கள் விடைத்தாள் இல்லை எனப் புகார் எழுப்பியுள்ளனர். இந்தப் புகார்கள் குறித்து சி.பி.எஸ்.இ. தரப்பில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் இந்த விவகாரம் பெற்றோர் மத்தியிலும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சி.பி.எஸ்.இ.யின் வெளிப்படைத்தன்மை மற்றும் தொழில்நுட்ப சேவைகள் மாணவர்களுக்கு பெரும் உதவியாக இருந்தாலும், சில இடங்களில் ஏற்பட்ட குளறுபடிகள் மாணவர்களுக்கு மேலும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளன.

தேர்வு முடிவுகள் மற்றும் மறுமதிப்பீட்டு நிலை குறித்து மாணவர்கள் சி.பி.எஸ்.இ. இணையதளத்தை தொடர்ந்து கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: CBSE மதிப்பீட்டு சர்ச்சை: மாணவர் தரவுகளை சொந்த சர்வருக்கு மாற்றிய வாரியம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share