'இரத்த ஆறு ஓடுமா..? உங்க அம்மாவை கொன்றது யாரு..? பிலாவல் பூட்டோவுக்கு ஓவைசி மரண அடி..!
இந்தியாவில், இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே சண்டை ஏற்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். இந்தக் காரணத்திற்காகவே பஹல்காம் தாக்குதல் நடந்தது.
பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பிலாவல் பூட்டோ சிந்து மாகாணத்தின் சுக்கூரில் நடைபெற்ற பேரணியில் மக்களிடையே உரையாற்றியபோது இந்தியாவை குறிவைத்து தாக்கினார்.''நமது தண்ணீர் சிந்து நதியிலிருந்து பாயும் இல்லையெனில் இந்தியர்களின் இரத்தம் பாயும்' என்று கூறினார்.
பிலாவல் பூட்டோவின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ''குழந்தைத்தனமான விஷயங்களைப் பற்றி அவர் பேசக்கூடாது'' என்று நாடாளுமன்ற உறுப்பினர் அசாதுதீன் ஒவைசி பதிலடி கொடுத்துள்ளார். ''பிலாவல் பூட்டோவின் தாயார் அவரது சொந்த வீட்டிலிருந்தே பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார். அதற்கு என்ன சொல்வார் பிலாவல்?'' என பழைய விஷயங்களை ஒவைசி நேரடியாக நினைவுபடுத்தினார்.
இதையும் படிங்க: தீவிரவாதிகள் எப்படி எல்லை தாண்டினார்கள் ? அசாதுதின் ஒவைசி சந்தேகம்...
அத்துடன் அசாதுதீன் ஓவைசி மற்றொரு பாகிஸ்தானுக்கு எதிராக கோரிக்கையையும் வெளியிட்டுள்ளார். ''பாகிஸ்தானை மீண்டும் நிதி நடவடிக்கை பணிக்குழுவின் 'சாம்பல்' பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதே எனது கோரிக்கை. இது எந்த நாடு பயங்கரவாதத்திற்கு நிதியளிக்கிறது என்பதைக் கண்காணிக்கும் ஒரு அமைப்பு. பாகிஸ்தானின் 'ஆழ்ந்த அரசு' அங்குள்ள சிலர் இந்தியாவில், இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே சண்டை ஏற்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். இந்தக் காரணத்திற்காகவே பஹல்காம் தாக்குதல் நடந்தது.
பாகிஸ்தான் எப்போதும் அணுசக்தி நாடாக இருப்பது பற்றிப் பேசுகிறது. அவர்கள் எந்த நாட்டிற்குள் நுழைந்து அப்பாவி மக்களைக் கொன்றாலும், அந்த நாடு அமைதியாக இருக்காது என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். எந்த அரசாங்கமாக இருந்தாலும் சரி, நமது மண்ணில் நமது மக்களைக் கொன்று, மதத்தின் அடிப்படையில் அவர்களை குறிவைத்து, நீங்கள் எந்த 'மார்க்கத்தைப்' பற்றிப் பேசுகிறீர்கள்? நீங்கள் ஐஎஸ்ஐஎஸ் போல நடந்து கொண்டீர்கள். பாகிஸ்தான் தனது செயல்களுக்கான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்'' என எச்சரித்தார்.
வக்ஃப் திருத்தச் சட்டம் குறித்து பேசிய ஒவைசி, ''இந்தச் சட்டம் நமது அடிப்படை உரிமைகளை மீறுகிறது. இந்தச் சட்டத்தின் நோக்கம் வக்ஃப் சொத்துக்களைக் காப்பாற்றுவது அல்ல. மாறாக முஸ்லிம்களிடம் இருந்து அவற்றைப் பறிப்பதே. வக்ஃப் சொத்து என்பது முஸ்லிம்களின் மதச் சொத்து. இந்த சொத்துக்களை அரசு கையகப்படுத்த விரும்புகிறது'' என்று கூறினார்.
இதையும் படிங்க: ‘மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் பேசுகிறார்’.. பிலாவல் பூட்டாவை விளாசிய மத்திய அமைச்சர் ஹர்தீப் பூரி..!