×
 

பயங்கரவாதிகளின் பிணத்தில் தேசிய கொடி.. ராணுவ மரியாதை... வெட்கமற்ற பாகிஸ்தான்..!

பாகிஸ்தானில், இராணுவத்திற்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை என்பதற்கு உங்களுக்கு இன்னும் ஆதாரம் தேவையா?

பாகிஸ்தான் ராணுவம் பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் மற்ரும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் இந்திய ராணுவத்தினர் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் 9 இடங்களை குறிவைத்து நடத்தப்பட்டது. இதில் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. 90க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 

கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்குகள் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், தடைசெய்யப்பட்ட ஜமாத்-உத்-தவா உறுப்பினர்கள் புதன்கிழமை லாகூரில் இருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் உள்ள முரிட்கேயில் உள்ள பயங்கரவாதக் குழுவின் தலைமையகத்தில் இந்திய இராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்ட மூன்று நபர்களின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர்.

காரி அப்துல் மாலிக், காலித் மற்றும் முடாசிர் ஆகியோருக்கான இறுதிச் சடங்கு பிரார்த்தனைகள் முரிட்கேயில் பலத்த பாதுகாப்பின் கீழ் நடைபெற்றன. பாகிஸ்தான் மர்காசி முஸ்லிம் லீக்கின் செய்தித் தொடர்பாளர் தபிஷ் கயூமின் தகவல்படி ஜே.யூ.டியின் அரசியல் பிரிவு - சிவில் அதிகாரத்துவ உறுப்பினர்களும் விழாவில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கயூம், இராணுவ பணியாளர்களின் வருகையை உறுதிப்படுத்தினார்.

இதையும் படிங்க: அம்பானிக்கு நிகரான ஆடம்பர வாழ்க்கை..! ஏழை நாட்டில் குஜாலாக அனுபவிக்கும் பாக்., ராணுவ ஜெனரல் முனீர்..!

பிரார்த்தனைகளுக்கு ஹபீஸ் அப்துல் ரவூப் தலைமை தாங்கினார். பங்கேற்பாளர்கள் பாகிஸ்தானின் பாதுகாப்புக்காக பிரார்த்தனை செய்தனர். இறந்தவர்களின் உடலில் பாகிஸ்தான் தேசியக் கொடி போர்த்தப்பட்டு இருந்தது.

"பாகிஸ்தானைத் தாக்கிய இந்தியாவுக்கு பகல் நேரத்தில் பதில் கிடைக்கும்," என்று கயூம் கூறினார். தாக்குதல் நடந்தபோது மூன்று பேரும் ஒரு மசூதியை ஒட்டிய அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர். தாக்குதலில் மசூதி அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மாலிக், காலித் மற்றும் முடாசிர் ஆகியோர் மசூதியின் பிரார்த்தனைத் தலைவர்களாகவும் பராமரிப்பாளர்களாகவும் பணியாற்றினர்.

இதனால் கொந்தளித்த இந்திய ஆதரவாளர்கள் பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கு வீடியோக்களை சமூகவலைதளங்களில் பதிவேற்றி, ''அன்புள்ள உலகமே, இந்த காணொளி பாகிஸ்தானில் இருந்து வந்தது. பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில் வெளிப்படையாக பங்கேற்கிறார்கள். பாகிஸ்தானில், இராணுவத்திற்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை என்பதற்கு உங்களுக்கு இன்னும் ஆதாரம் தேவையா?'' என்று ஆவேசப்பட்டுள்ளனர்.

Dear world, this video is from Pakistan. Pakistani Army officers are openly participating in the funeral of terrorists...

Do you need more proof that in Pakistan, there's no difference between the Army and terrorists? pic.twitter.com/RxVajNhfJt

— Mr Sinha (@MrSinha_) May 7, 2025

 

''பாகிஸ்தான் ராணுவம் பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்கிறது. பாகிஸ்தான் கொடிகளால் பயங்கரவாதிகள் போர்த்தப்பட்டுள்ளனர். இந்த ஆபத்தான ஒப்புதல் ஐ.நா மற்றும் உலக சக்திகளிடமிருந்து அவசர நடவடிக்கையைக் கோருகிறது'' என மற்றொருவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு சிம்ம சொப்பனமாக மாறிய இந்தியா... பகை நெருப்பில் கருகும் அரபு நாடுகள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share