குறுக்குப் புத்தியைக் காட்டிய பாகிஸ்தான்; பிரதமர் மோடி அவசர மீட்டிங் - அடுத்தது என்ன?
பாகிஸ்தானின் தாக்குதலை எடுத்து பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
பாகிஸ்தான் இரண்டாவது முறையாக ட்ரோன்களை பாகிஸ்தான் ஏவுகனைகளை கொண்டும் விமானப்படை மூலமாக தாக்குவதற்கு முயன்று இருக்கிறது. ஆனால் இந்திய ராணுவமும் இந்தியாவினுடைய வான் பாதுகாப்பு அமைப்பின் மூலமாகவும் அவர்களுடைய முயற்சி முழுவதுமாக முறியடிக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து எல்லை ஓரங்களில் உஷார் நிலையில் வந்து இருக்கக்கூடிய நிலையில் தற்பொழுது பிரதமர் மோடி தலைமையில் அவசர ஆலோசனை நடத்தப்படுகிறது. இதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளினுடைய தலைமை தளபதி அனில் சவுகான், முப்படைகளினுடைய தளபதிகளும் இருக்கிறார்கள். முக்கியமாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் கோவல் இருக்கிறார்.
அடுத்த கட்டமாக இந்தியா என்ன நடவடிக்கை மேற்கொள்ளும். எந்த மாதிரியான நடவடிக்கைகளைமேற்கொள்வது என்பது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இதற்கு உரிய பதிலடி கொடுத்து வரும் நிலையில் அவர்களுக்கு ஏற்கனவே ஐநாவினுடைய உறுப்பு நாடுகளில் எல்லாம் வந்து அவர்கள் தனித்தனியாக வந்து வெளியுறவு துறை செயலாளர் மூலமாகவும் வந்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த தாக்குதல் பயங்கரவாதிகளுக்கு எதிரான எடுக்கப்பட்ட நடவடிக்கை.
பஹல்காமில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்கு எதிராக பயங்கரவாதிகள் கூடாரங்களை குறிவைத்து தான் இந்த தாக்கு நடத்தப்பட்டது. ஆனால் இதற்கு பாகிஸ்தான் அவற்றை வந்து ஒரு போர் நடவடிக்கையாக எடுத்துக் கொள்வதாகவும், அதற்கான பதிலடியை இந்தியாவிற்கு கொடுக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த சூழல்ல மீண்டும் வந்து பாகிஸ்தான் எல்லைத் தாண்டி தாக்குதல் நடத்தியுள்ளது.
இதையும் படிங்க: காஷ்மீர் விமான நிலையம் மீது பாக். தாக்குதல்... எஸ்400-ஐ பயன்படுத்தி இந்திய ராணுவம் பதிலடி!!
ஒரே நாளில் இரண்டாவது முறையாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கக்கூடிய நிலையில், பிரதமர் மோடியுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார்கள், முப்படைகளினுடைய தளபதியுடன் மற்றும் முப்படைகளுடைய தலைமை தளபதி அணில் சவகானும் ஆலோசனையில் வந்து ஈடுபட்டிருக்கிறார்.
அடுத்த கட்ட நடவடிக்கை ஒரு அறிவிப்பை வெளியிடுவார்கள் என்றால் சத்தமில்லாமல் தொடர்ந்து இந்தியா உரிய பதிலடியை கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரதமருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முப்படை தளபதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் முப்படை தலைமை தளபதியும் பங்கேற்றார். எல்லையில் பாகிஸ்தானின் அத்துமீறல் குறித்து அவசர ஆலோசனை நடைபெற்றது.
ஜம்மு காஷ்மீரினுடைய எல்லை பகுதி முழுவதுமாக நம்முடைய வான் பாதுகாப்பு அமைப்புகள், பீரங்கிகள் நம்முடைய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் முழு அளவில் தயார் நிலையில் உள்ளன. தற்பொழுது வேகமாக ஜம்மு காஷ்மீரை நோக்கி வந்து கொண்டிருக்கின்ற ராட்சத ஏவுகனைகள் அனைத்தையும் நம்முடைய ராணுவ வீரர்களும் ராணுவத்தினுடைய அந்த நவீன போர் தளவாடங்களைப் பயன்படுத்தி தடுத்து நிறுத்திக் கொண்டிருக்கின்றார்கள். பாகிஸ்தானின் சியால்கோட் பகுதியிலே ராணுவம் பதிலடி வழங்கிக் கொண்டிருக்கின்றது. ராணுவ நிலைகளை குறிவைத்தும், பாகிஸ்தானை நோக்கி தாக்க தொடங்கியிருக்கிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இடம் பெற்ற ராணுவ அதிகாரிகள், இதற்கு மேல் பொறுப்பதற்கு எதுவும் இல்லை முழு பலத்தோடு பாகிஸ்தானுக்கு பதிலடி தர வேண்டும். கடந்த இரண்டு நாட்களாக பாகிஸ்தானுக்கு பல வாய்ப்புகளை கொடுத்தாச்சு. பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்திய பிறகும் பாகிஸ்தான் தங்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை என்று நிம்மதி விடாமல் நிம்மதி பெருமூச்சின்றி மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்துவதற்கான ஒரு முயற்சியிலே ஈடுபட்டிருக்கின்றது. முதலும் கடைசியுமாக பாகிஸ்தானுக்கு ஒரு பாடத்தை புகட்ட வேண்டிய தேவை இந்தியாவிற்கு எழுந்திருக்கின்றது என பிரதமரிடம் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பாக். திட்டத்தை தவிடுபொடியாக்கிய இந்தியா.. பதிலடி தாக்குதல் முயற்சியில் படுதோல்வி!!