இந்தியாவுடன் முழு வீச்சில் போர் வெடிக்கும்!! பாக்., அமைச்சர் திமிர் பேச்சு!! மீண்டும் போர் பதற்றம்!
இந்தியாவுடன் முழு அளவிலான போர் வெடிக்கும் சாத்தியக்கூறுகளைப் புறக்கணிக்க முடியாது என்று சொல்லி பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூரை இன்னும் ஜீரணிக்க முடியாத பாகிஸ்தான், மீண்டும் போர் மிரட்டல் விடுத்துள்ளது. அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், “இந்தியாவுடன் முழு அளவிலான போர் வெடிக்கும் வாய்ப்பை எந்த நேரமும் நிராகரிக்க முடியாது. இந்தியாவின் எல்லைத் தாண்டிய அத்துமீறல்களை நாங்கள் எதிர்கொள்ளத் தயார்” என்று தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இதைத் தாங்கிக் கொள்ள முடியாத பாகிஸ்தான் எல்லையில் தாக்குதல் நடத்த முயன்றது. ஆனால் இந்திய ராணுவத்தின் கடும் பதிலடிக்குப் பிறகு போர் நிறுத்தத்தைக் கோரி அழுது அடித்தது பாகிஸ்தான். அதன்பிறகும் அந்நாட்டு அமைச்சர்கள் திமிராகப் பேசுவதை நிறுத்தவில்லை.
தற்போது மீண்டும் கவாஜா ஆசிப் ஒரு தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில், “எந்தச் சூழலிலும் இந்தியாவை நம்ப முடியாது. முழு அளவிலான போர் வெடிக்கும் சாத்தியத்தை நிராகரிக்க முடியாது. இந்தியாவின் அச்சுறுத்தல்களையும் எல்லைத் தாண்டிய தாக்குதல்களையும் எதிர்கொள்ள நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம்” என்று மீண்டும் போர் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: இரண்டு பக்கமும் போர்!! நெருக்கடியில் பாக்., எங்களை சிக்க வைக்க பார்க்கிறது இந்தியா! புலம்பும் கவாஜா!
இதே கவாஜா ஆசிப் தான் இந்த மாத தொடக்கத்திலும், “கிழக்கு (இந்தியா) மற்றும் மேற்கு (ஆப்கானிஸ்தான்) எல்லைகளில் ஒரே நேரத்தில் போர் நடந்தாலும் எதிர்கொள்ளத் தயார். முதல் சுற்றில் இறைவன் எங்களுக்கு உதவினான், இரண்டாவது சுற்றிலும் உதவுவான்” என்று ஆணவமாகப் பேசினார்.
கடந்த மாதம் ஆப்கானிஸ்தான் தாலிபான்களுக்கு இந்தியா பண உதவி அளிப்பதாகவும், “ஆப்கானிஸ்தான் இப்போது டெல்லிக்காக மறைமுகப் போர் நடத்துகிறது” என்றும் பொய்க் குற்றச்சாட்டு சுமத்தினார்.
பாகிஸ்தான் தற்போது ஆப்கானிஸ்தானுடனும் எல்லைப் பிரச்சினையில் மோதல் போக்கை வைத்துள்ளது. இரு எல்லைகளிலும் பதற்றம் நிலவுவதால், பாகிஸ்தான் ராணுவம் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் உள்நாட்டிலேயே பொருளாதார நெருக்கடியும், அரசியல் குழப்பமும் தலைவிரித்தாடுவதால், இந்தியாவை மிரட்டுவதன் மூலம் மட்டுமே தன் மக்களிடம் “நாங்கள் வலிமையானவர்கள்” என்று காட்ட முயல்கிறது பாகிஸ்தான்.
இந்தியா தரப்பில் இதுவரை இந்த மிரட்டலுக்கு எந்த அதிகாரப்பூர்வ பதிலும் தரப்படவில்லை. ஆனால் ராணுவ வட்டாரங்கள், “பாகிஸ்தான் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் பேசட்டும். எப்போது வேண்டுமானாலும் தக்க பதிலடி கொடுக்க இந்தியா தயாராக உள்ளது” என்று தெரிவித்துள்ளன.
பாகிஸ்தான் அமைச்சர்களின் இந்தத் தொடர் அறிக்கைகள் இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளன.
இதையும் படிங்க: டெல்லி கார் வெடிப்புக்கு பின்னணியில் பாக்.,!! பழி தீர்த்த மசூத் அசார்!! கணக்கு முடிக்க காத்திருக்கும் RAW!