சுத்து போட்டு அடிக்கும் இந்தியா ... பாகிஸ்தானுக்குள் வெடித்த புது புரட்சி ...!
பலூசிஸ்தான் ஆதரவாளர்களும், குண்டுவெடிப்பு சம்பவங்களில் ஈடுபடுவதால் மூன்று முனைகளிலும் பாகிஸ்தான் கடும் அழுத்தத்தைச் சந்தித்து வருகிறது.
ஜம்மு, ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய இடங்களில் ட்ரோன்-ஏவுகணை தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் முயன்றது. அதை இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு அமைப்பு முறியடித்தது. எஸ்-400 அனைத்து ட்ரோன்களை இந்திய பாதுகாப்பு அமைப்பு தும்சம் செய்தது. இதனையடுத்து இந்திய ராணுவம் பாகிஸ்தானின் லாகூர், இஸ்லாமாபாத், கராச்சி, சியால்கோட், பஹாவல்பூர், பெஷாவர் உள்ளிட்ட 8 நகரங்கள் மீது பதிலடி தாக்குதல் நடத்தியது. இது தவிர, இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள முசாபராபாத், கோட்லி மீது ஏவுகணைகளை வீசியுள்ளது. லாகூரில் உள்ள பாகிஸ்தான் வான் பாதுகாப்பு அமைப்பை இந்தியா அழித்தது. மூன்று படைகளும் சேர்ந்து பாகிஸ்தானை துவம்சம் செய்தது.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள கராச்சி துறைமுகத்தில் இந்திய கடற்படை 10 ஏவுகணைகள், ட்ரோன்களை ஏவியது. இந்திய ராணுவம், பாகிஸ்தான் கராச்சி துறைமுகத்தை கடல் தாக்குதலால் அழித்துவிட்டது. அரபிக்கடலில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஐ.என்.எஸ் விக்ராந்த் இந்த அழிவை ஏற்படுத்தியுள்ளது. கராச்சி துறைமுகம் உட்பட நகரின் பல பகுதிகளில் கடற்படையின் தாக்குதல் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பின்னர் அமெரிக்கா, கத்தார், ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், சவுதி அரேபியா, ஈரான், இங்கிலாந்து, இத்தாலி ஆகிய 10 நாடுகளுடன் வெலியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். தற்போதும் பாகிஸ்தான் அத்துமீறி வரும் நிலையில், இந்தியா முன்னெடுத்துவரும் பதில் நடவடிக்கைகள் குறித்து பேசியதாக தகவல். இந்தியா நடத்தி வரும் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் திணறி வருவதாக தகவல்.
இதையும் படிங்க: அடிபட்டும் அடங்காத பாக்., அதிகாலை காலை அனுப்பிய அஸ்திரம்... சுக்குநூறாக்கிய இந்தியா..!
அரபிக்கடல் வழியாக பாகிஸ்தானின் ஒவ்வொரு அசைவையும் இந்திய போர்க்கப்பல்கள், விமானங்கள் கண்காணித்து வருகின்றன. பலூசிஸ்தான் ஆதரவாளர்களும், குண்டுவெடிப்பு சம்பவங்களில் ஈடுபடுவதால் மூன்று முனைகளிலும் பாகிஸ்தான் கடும் அழுத்தத்தைச் சந்தித்து வருகிறது.
இதையும் படிங்க: பாக்-ல் 35 நிமிடங்களில் கராச்சி முதல் கடல்வரை... பஸ்பமாக்கிய இந்திய ராணுவம்..!