×
 

எந்நேரமும் இந்தியாவை உளவு பார்க்கும் பாக்., செயற்கைகோள்!! சீனாவுடன் கூட்டு சதி! காத்திருக்கும் பேராபத்து!

இந்தியாவை எந்நேரமும் கண்காணிக்க பாகிஸ்தான் 6 செயற்கைகோள்களை விண்ணில் ஏவியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.

இந்தியாவின் பாதுகாப்பு வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ள தகவலாக, பாகிஸ்தான் கடந்த சில மாதங்களில் தொடர்ச்சியாக ஆறு புதிய புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நடவடிக்கை, இந்திய எல்லை மற்றும் முக்கிய பகுதிகளை கண்காணிக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது.

பாகிஸ்தானின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான சுபார்கோ (SUPARCO) 1961ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த பல தசாப்தங்களில் அந்த நாடு மிகக் குறைந்த எண்ணிக்கையிலான செயற்கைக்கோள்களை மட்டுமே விண்ணில் செலுத்தியிருந்தது. ஆனால் 2025 ஜனவரி முதல் 2026 ஜூன் வரையிலான காலகட்டத்தில் மட்டும் ஆறு புதிய செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது.

இந்த செயற்கைக்கோள்கள் அனைத்தும் புவி கண்காணிப்பு வகையைச் சேர்ந்தவை என கூறப்படுகிறது. வழக்கமாக உலகின் பல பகுதிகளை கண்காணிக்கும் வகையில் செயற்கைக்கோள்கள் சன்-சின்க்ரோனஸ் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படுகின்றன. ஆனால் பாகிஸ்தானின் புதிய செயற்கைக்கோள்கள் சாய்ந்த சுற்றுப்பாதைகளில் இயக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: இந்தியாவில் தாக்குதல் நடத்த சதிதிட்டம்! தாவுத் இப்ராஹிம் கூட்டாளிகள் 9 பேர் கைது! சதி முறியடிப்பு!

விண்வெளி ஆய்வு தொடர்பான தகவல்களின்படி, இந்த சுற்றுப்பாதை அமைப்பு இந்திய துணைக்கண்டத்தின் மீது அதிக நேரம் கண்காணிப்பு மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர். இதன் மூலம் முக்கிய ராணுவ தளங்கள், எல்லைப் பகுதிகள் மற்றும் கட்டமைப்பு வசதிகள் தொடர்பான படங்களை அடிக்கடி பதிவு செய்யும் திறன் கிடைக்கக்கூடும் என கூறப்படுகிறது.

மேலும், இந்த செயற்கைக்கோள்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், சேகரிக்கப்படும் தகவல்களை விரைவாக பகுப்பாய்வு செய்யும் திறன் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேலும் துல்லியமாக மாறும் என மதிப்பிடப்படுகிறது.

இந்த செயற்கைக்கோள்கள் சீனாவின் ஏவுதளங்களிலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டதாக வெளியாகியுள்ள தகவலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அதிகாரப்பூர்வமாக வேளாண்மை, சுற்றுச்சூழல் கண்காணிப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை தேவைகளுக்காகவே இத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாக பாகிஸ்தான் தரப்பு கூறி வருகிறது.

இருப்பினும், இந்தியா-பாகிஸ்தான் உறவுகள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இந்த செயற்கைக்கோள் திட்டங்கள் குறித்து பாதுகாப்பு நிபுணர்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: மேற்காசிய மோதல் மேலும் தீவிரமடையலாம்?! போர் எப்போ முடியும்?! பெட்ரோலியம் அமைச்சர் தகவல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share