×
 

ஒரே அடியில் அழிக்க குறி வைத்த இந்திய ஏவுகணை..! அலறியடித்து அமெரிக்காவிடம் கெஞ்சிய பாகிஸ்தான்..!

இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ மோதல் அணு ஆயுதப் போரின் வடிவத்தை எடுக்கக்கூடும் என்ற அச்சத்தில் அமெரிக்கா தலையிட்டதாகக் கூறப்படுகிறது.

நேற்று பாகிஸ்தான் எதிர்பார்க்காத வகையில் இந்தியா பாகிஸ்தானைத் தாக்கியது. அப்போது, ​​பாகிஸ்தானின் பல விமானத் தளங்களை இந்தியா வெடிக்கச் செய்தது. இந்தத் தளம் பாகிஸ்தான் விமானப்படையின் முக்கிய மையம் மட்டுமல்ல. பாகிஸ்தானின் சுமார் 170 அணு ஆயுதங்களின் பாதுகாப்பு, ஏவுதலுக்குப் பொறுப்பான முக்கியத் திட்டப் பிரிவின் தலைமையகம் இங்குதான் இருக்கிறது.

 

இந்தியாவின் இந்த ஏவுகணை விழுந்தவுடன், பதறிப்போன பாகிஸ்தான் பிரதமர் உடனடியாக நாட்டின் அணு ஆயுதப் பிரிவைக் காப்பாற்றுவதற்காக தேசிய கட்டளை ஆணையத்தின் கூட்டத்தை கூட்டினார். அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது குறித்து முடிவுகளை எடுக்கும் மிக உயர்ந்த அமைப்பு இந்த அணு ஆயுதக் கட்டளை. இந்தத் தாக்குதல் பற்றிய தகவல் வந்தவுடன், அமெரிக்காவில் பரபரப்பு ஏற்பட்டது.

 

இந்த மோதல் அமெரிக்காவின் பிரச்சினை அல்ல என்று முன்னதாக கூறி வந்த துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் உடனடியாக இந்தியாவை அவசரமாக அழைத்தார். ஜே.டி. வான்ஸ் இந்தியப் பிரதமர் மோடியிடம் பேசும்போது இந்தச் சண்டை முழு அளவிலான போராக மாறக்கூடும் என்ற ஆபத்தை எடுத்து கூறியுள்ளார். மறுபுறம், அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ பாகிஸ்தானின் இராணுவத் தலைவர் ஜெனரல் அசிம் முனீரை அழைத்தார். ரூபியோ இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கரையும் தொடர்பு கொண்டார்.

இதையும் படிங்க: உலகை ஏமாற்றும் ஓநாய்..! அழுது பிச்சை எடுத்து இந்தியாவை சிதைக்க துடிக்கும் பாகிஸ்தான்..!

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களுக்கான கட்டளை, கட்டுப்பாட்டு மையம் நூர் கான் விமான நிலையத்திற்கு அருகில் உள்ளது. அதாவது இந்தியா விரும்பினால், இந்த கட்டளை அமைப்பை குறிவைத்து இருக்கலாம். இந்த தாக்குதல் அணு ஆயுத கட்டளையை முடக்கும் திறன் கொண்டது. பாகிஸ்தானின் அணு ஆயுதக் கட்டளை அமைப்பு ராணுவத் தலைவரின் தலைமையில் உள்ளது. இந்த நெருக்கடி குறித்து அவர்கள் எந்த முறையான கூட்டத்தையும் நடத்தவில்லை. ஆனால் இந்த இடத்தை இந்தியா குறி வைப்பதாக கூறப்பட்டது உலகம் முழுவதும் கவலைகளை எழுப்பியது. இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ மோதல் அணு ஆயுதப் போரின் வடிவத்தை எடுக்கக்கூடும் என்ற அச்சத்தில் அமெரிக்கா தலையிட்டதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: இந்தியாவுடன் பாக்., தீர்க்கத் துடிக்கும் அந்த 3 பிரச்சினைகள்..! சாந்தமான சைத்தான் கவாஜா..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share