சிக்கலில் சிக்கிய பாகிஸ்தான் பெண்... இந்தியாவை விட்டு வெளியேற மறுப்பு!
பாகிஸ்தானியர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு கெடு விதித்திருந்த நிலையில், கடந்த 13 ஆண்டுகளாக கணவருடன் புதுச்சேரியில் வசித்து வரும் பெண்ணுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியை சேர்ந்த நபரை திருமணம் செய்து கொண்டு வசித்து வரும் பாகிஸ்தான் குடியுரிமை பெற்ற பஃவ்சியா பானு , மத்திய அரசு உத்தரவுப்படி நாட்டை விட்டு வெளியேறாத நிலையில் லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
புதுச்சேரியில் பாகிஸ்தான் தங்கி இருந்தவர்கள் அனைவரும் வெளியேற்ற வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தலின் படி புதுச்சேரியில் தங்கியிருந்த பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் வெளியேற வேண்டும் என்றும், யார் யாரெல்லாம் தங்கி இருக்கிறார்கள் என்றும் புதுச்சேரி அரசானது அதனை கண்காணித்த நிலையில், விசா காலம் முடிந்தும் நாட்டை விட்டு வெளியேறாத பாகிஸ்தான் பெண் மீது தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி கிருஷ்ணா நகர் தொகுதியைச் சேந்தவர் ஹலீப்கான் இவர் பாகிஸ்தான் பிரிவை பெற்ற பஃவ்சியா பானு என்பவரை 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து புதுச்சேரியில் வசித்து வருகிறார். பானு தனது விசாவை 12 வருடங்களாக நீடித்து வந்த நிலையில் தற்போது அதனை புதுப்பிக்கவில்லை என தெரிகிறது. இதனைத் தொடர்ந்து புதுச்சேரியில் உள்ள துாதரக அதிகாரிகள் நேற்று லாஸ்பேட்டையில் பஃவ்சியா பானு வீட்டிற்கு சென்று, புதுச்சேரியில் இருந்து வெளியேறுமாறு கூறி, நோட்டீஸ் வழங்கினர். ஆனால் அவர் புதுச்சேரியை விட்டு வெளியேறாததால் அவர் மீது குடியுரிமை பதிவு அலுவலக அதிகாரிகள் லாஸ்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையும் படிங்க: 24-36 மணி நேரம் தான்.. இந்தியா தாக்கும்... நள்ளிரவு முதல் நடுக்கத்தில் பாகிஸ்தான்..!
இதனிடையே, லாஸ்பேட்டை காவல்நிலையத்திற்கு கணவருடன் நேரில் சென்ற பஃவ்சியா பானு, தனக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும், தனது விசாவை நீட்டித்து தனது குடும்பத்துடன் தொடர்ந்து வசிக்க உதவ வேண்டும் என புதுச்சேரி முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: விரட்டி விரட்டி வேட்டை... பாக்., ராணுவத்தை பொசுக்கும் பலூச்படை... ஒரே இரவில் 102 பேர் பலி..!