×
 

பாக்-சீனா தயாரித்த போர் விமானம்.. இந்தியாவுக்கு எதிராக திரண்ட பங்காளிகள்.. நடுவானில் பஸ்பமாக்கிய ராணுவம்..!

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடி கொடுக்க நேற்று இரவு பாகிஸ்தான் நடத்திய திடீர் தாக்குதலை முன்கூட்டியே கணித்து வைத்திருந்த இந்தியா, சாதூரியமாக பதிலடி கொடுத்தது.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமுக்கு சென்ற சுற்றுலா பயணியரில், ஆண்களை மட்டும் குறி வைத்து 26 பேரை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். பெண்களின் கண்ணெதிரிலேயே கணவன் கொல்லப்பட்டதற்கு பழிதீர்க்கும் விதமாக ஆப்பரேஷன் சிந்துார் என்ற ராணுவ நடவடிக்கையை நம் நாடு நேற்று முன்தினம் துவங்கியது. அதன்படி, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்ட 9 பயங்கரவாத முகாம்களை நம் ராணுவம் நிர்மூலமாக்கியது. அதில், 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 

இதன் காரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்தியாவிலுள்ள பொது மக்களின் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருவதால் போர் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் தீவிரவாதிகளை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்திய நிலையில் இந்தியாவில் உள்ள மக்களின் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக எல்லை பகுதிகளில் உள்ள ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப், ஹிமாச்சல் ஆகிய பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது.

இதையும் படிங்க: காஷ்மீர் வளர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது..! பியூஷ் கோயல் உறுதி..!

காஷ்மீர் பகுதிகளில் நேற்று இரவு தொடங்கிய இரு ராணுவத்திற்கும் இடையிலான சண்டை விடிய விடிய நடந்துள்ளது. இரு தரப்பிலும் துப்பாக்கி சூடுகள் மற்றும் குண்டுகள் வீசப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து இந்தியா நோக்கி வந்த மூன்று போர் விமானங்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. அதிநவீன வசதிகளுடன் பாகிஸ்தான் போர் விமானங்களை இந்தியா வீழ்த்தியது. இந்தியா முதலில் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்திய நிலையில் பாகிஸ்தானும் ட்ரோன்களை அனுப்பி உள்ளது, அதனை நடுவானிலேயே இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது.

தற்போது இந்த போர் விமானங்கள் குறித்த பின்னணி தெரியவந்துள்ளது. குறிப்பாக, பாகிஸ்தானும் சீனாவும் சேர்ந்து தயாரித்த JF-17 ரக போர் விமானங்கள் இரண்டை நம் ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. இது நான்காம் தலைமுறை விமானம். ஏற்கனவே இவற்றை இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பயன்படுத்தி இருக்கிறது.

இதை விட முக்கியமாக F-16 ரக போர் விமானம் ஒன்றையும் இந்தியா சுட்டு வீழ்த்தி இருக்கிறது. இது பாகிஸ்தான் வசம் இருக்கும் சக்தி வாய்ந்த போர் விமானங்களுள் ஒன்று. ரபேல் அளவு வராது. இருப்பினும் ஓரளவு தாக்கும் திறன் கொண்டது. காரணம் இது அமெரிக்காவின் தயாரிப்பு.

ஆப்கன் ஆபரேஷனில் அமெரிக்காவுக்கு உதவியதற்காக பாகிஸ்தானுக்கு இந்த போர் விமானங்களை அமெரிக்கா கொடுத்தது. அதை இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தக் கூடாது என்பது அமெரிக்காவின் கண்டிஷன். அதையும் மீறி இப்போது பாகிஸ்தான் பயன்படுத்தி உள்ளது. இந்த நிலையில் தான் அவற்றில் ஒன்றை இந்தியா சுட்டு வீழ்த்திய தகவல் வெளியாகி உள்ளது.

இந்த மூன்று போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது தொடர்பாக இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை ராணுவம் வெளியிடவில்லை. ஒரே நேரத்தில் காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் என 3 மாநிலங்களில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதல் முறியடிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் போர் விமானங்கள், ஏவுகணைகளை பாகிஸ்தான் பயன்படுத்தியது. இவை இல்லாமல் 50 ட்ரோன்களையும் இந்தியா மேல் ஏவி விட்டது. எல்லா ட்ரோன்களையும் இந்தியா தவிடுபொடியாக்கி விட்டது.

இதையும் படிங்க: ஒன்றல்ல, இரண்டல்ல 3 அரக்கன்களை களமிறக்க திட்டம்.. பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கத் தயாராகும் இந்தியா!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share