×
 

அடப்பாவமே... கொட்டாவி விட்டது குத்தமா? வாயை மூட முடியாமல் தவித்த இளைஞர்...!

கொட்டாவி விட சிறந்த வாயை மீண்டும் மூட முடியாமல் தவித்த இளைஞரின் நிலை காண்போரை அதிர்ச்சியடைய செய்தது.

தூக்கம், பசி, கொட்டாவி இவையெல்லாம் ஒரு மனிதனுக்கு வருவது இயல்புதான். இந்த கொட்டாவி ஒருவருக்கு கொடுத்த கஷ்டத்தை சொல்லி தீராது. கொட்டாவி விடுவதற்கு வாயை திறந்த போது மீண்டும் வாயை மூட முடியாமல் நிகழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

கன்னியாகுமரி- அசாம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இளைஞர் ஒருவர் பயணம் செய்துள்ளார். பாலக்காடு ரயில் நிலையத்திற்கு வந்தபோது அந்த வாலிபர் வழக்கம் போல் இயல்பாக கொட்டாவி விட்டுள்ளார். ஆனால் கொட்டாவி விட்ட நேரத்தில் மீண்டும் தனது வாயை மூடி இயல்பு நிலைக்கு வர முடியாமல் தவித்துள்ளார். தனக்கு நிகழ்ந்துள்ளது யாரிடமும் சொல்லி பேச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை அறிந்ததும் சக பயணிகள் அதிர்ச்சி அடைந்து ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். 

தொடர்ந்து பாலக்காடு ரயில்வே மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி ஒருவர் விரைந்து வந்து அந்த இளைஞருக்கு சிகிச்சை அளித்துள்ளார். இதை எடுத்து சிறிது நேரத்தில் அந்த வாலிபரின் வாய் மூடி இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. அப்போது தான் அந்த இளைஞருக்கு நிம்மதியே வந்துள்ளது. 

இதையும் படிங்க: நிறைமாத கர்ப்பிணி பெண் கொலை... சாதி வெறியாட்டத்தை நிகழ்த்திய கொடூர மாமனார்...!

கொட்டாவி விடுவதற்கு வாய் திறந்த போது மீண்டும் வாயை மூடாமல் போன நிலைக்கு காரணம் டெம்ப்ரோமாண்டிபுலர் ஜாயிண்ட் டிஸ்லொகேஷன் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். தாடை எலும்பு சுழற்சி சிக்கல் என்று இதனை கூறுவதாகவும் கீழ் தாடை எலும்பு இயல்பான இடத்தில் இருந்து நகர்ந்து விடுவதால் இது போன்ற பிரச்சனை ஏற்படுவதாகவும் கூறுகின்றனர். உடம்பில் உள்ள சில நோய்களாலும் இது போன்ற நிலை ஏற்படும் என்றும் மருத்துவர்களிடம் உடனடியாக உரிய சிகிச்சை எடுத்தால் சரியாக விடும் என்றும் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: ஒரு கிலோ இம்புட்டு விலையா??... இந்தியாவிலேயே காஸ்ட்லியான இனிப்பு... காரணத்தை கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share