×
 

தலையில் இடியை இறக்கிய MLA... திடீர் ராஜினாமாவால் பஞ்சாப் அரசியலில் பரபரப்பு

பஞ்சாப் மாநில பெண் எம்.எல். ஏ. அன்மோல் ககன்மான் திடீரென ராஜினாமா செய்து உள்ளார்.

இந்தியாவில் 2012 ஆம் ஆண்டு நவம்பர் 26 அன்று அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது சகாக்களால் தொடங்கப்பட்ட ஒரு அரசியல் கட்சி. 2011 ஆம் ஆண்டு இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் விளைவாக உருவான இந்தக் கட்சி, ஜன் லோக்பால் மசோதாவை கோரிய அண்ணா ஹசாரேவின் இயக்கத்திலிருந்து தோன்றியது. ஊழலை ஒழிப்பது மற்றும் அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வது, கல்வி, சுகாதாரம், மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை இலவசமாகவோ அல்லது மலிவு விலையிலோ வழங்குதல்., மக்களை முடிவெடுக்கும் செயல்முறையில் ஈடுபடுத்துவது உள்ளிட்டவற்றை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

 மேலும், பெண்கள், முதியோர், மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு உதவித்தொகை மற்றும் சமூக பாதுகாப்பு திட்டங்கள் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் நோக்கோடு செயல்பட்டு வருகிறது. 2023 ஏப்ரல் 10 அன்று, இந்திய தேர்தல் ஆணையம் ஆம் ஆத்மி கட்சிக்கு தேசிய கட்சி அந்தஸ்தை வழங்கியது. இது கட்சியின் வேகமான வளர்ச்சி மற்றும் தேசிய அளவிலான செல்வாக்கை உறுதிப்படுத்தியது.

இந்த நிலையில், தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி கட்சி வெளியேறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது. கூட்டணி முறிவு தொடர்பாக ஆம் ஆத்மி அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட நிலையில், பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி MLA ஒருவர் திடீரென ராஜினாமா செய்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பெண் எம்.எல்.ஏ. அன்மோல் ககன்மான் திடீரென ராஜினாமா செய்துள்ளார். கரார் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும் இவர், தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் குல்தார் சிங்கிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதையும் படிங்க: புதுச்சேரி அரசியலில் நெக்ஸ்ட் மூவ்.. புதிதாக மூன்று எம்.எல்.ஏக்கள் நியமனம்..!

பாடகராக இருந்து அரசியலுக்கு வந்த அன்மோல், கடந்த 2022ல் கரார் தொகுதியில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ. வாக ஆனவர். இவர், சுற்றுலா மற்றும் கலாசாரம், முதலீடு ஊக்குவிப்பு, தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவர். இந்த நிலையில், இவர் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: பதவியை இழந்த பாமக எம்.எல்.ஏக்கள்... அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய ராமதாஸ்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share