×
 

நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்கும் அமித் ஷா..!! எதிர்க்கட்சிகளுக்கு கிரண் ரிஜிஜு வைத்த வேண்டுகோள் என்ன..??

மாணவர்களுக்கு எதிரான நடவடிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் அமித் ஷா விளக்கம் அளிப்பார் என அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வில் ஏற்பட்ட வினாத்தாள் கசிவு மற்றும் பிற முறைகேடுகள் தொடர்பாக மாணவர்கள் மத்தியில் எழுந்த அதிருப்தி, தேசிய அளவிலான போராட்டமாக உருவெடுத்துள்ளது. கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) என்ற இளைஞர் அமைப்பினர், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் எனக் கோரி டெல்லியின் ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்திற்கு மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் பெருமளவில் ஆதரவு தெரிவித்தன. 

உச்ச நீதிமன்ற நீதிபதியின் ஒரு கருத்தைத் தொடர்ந்து உருவான இந்த அமைப்பு, தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான இளைஞர்களின் குரலாக மாறியது.கடந்த மாதம் 20-ஆம் தேதி, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கிய நாளன்று, மாணவர்களும் இளைஞர்களும் ‘சான்சத் சலோ’ என்ற முழக்கத்துடன் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி மேற்கொண்டனர். காவல்துறை தடைகளை மீறி முன்னேற முயன்றபோது மோதல் ஏற்பட்டது. 

தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு உள்ளிட்ட நடவடிக்கைகளில் மாணவர்களும் போலீசாரும் காயமடைந்தனர். இந்த நிகழ்வு எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. மாணவர்கள் மீது அத்துமீறிய தாக்குதல் நடத்தப்பட்டதாகக் குற்றம்சாட்டிய அவர்கள், உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என இரு அவைகளிலும் வலியுறுத்தினர். இந்தப் பின்னணியில், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிப்பார் எனத் தெரிவித்தார். 

இதையும் படிங்க: "மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகை!" - திருவண்ணாமலையில் 2 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை!

அவர் எதிர்க்கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்: “அமைச்சர் பதில் அளிக்கும்போது அச்சப்பட வேண்டாம்; அவையை விட்டு வெளியேறவும் வேண்டாம். கருத்து வேறுபாடுகளை நேருக்கு நேர் எதிர்கொள்வதே ஜனநாயகத்தின் வலிமை. ஆளும் தரப்பு பேசும்போது எதிர்க்கட்சிகள் கவனமாகக் கேட்டு, உண்மைகள், தவறுகள் மற்றும் மக்கள் பாதிப்புகளைத் தெளிவுபடுத்த வேண்டும். பதில் திருப்திகரமாக இல்லையெனில், ஆதாரங்களுடன் வலுவான கேள்விகளை முன்வைத்து அரசைப் பொறுப்புக்கூறச் செய்யலாம்.”

நாடாளுமன்றம் வெறும் கோஷங்களுக்கான இடமல்ல; மக்கள் பிரச்சினைகளை விவாதித்து, அரசின் செயல்பாடுகளை ஆய்வு செய்து உண்மையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் அமைப்பு என ரிஜிஜு வலியுறுத்தினார். விவாதத்தைத் தவிர்ப்பது சரியான செய்தியை அளிக்காது என்றும், எதிர்க்கட்சிகள் தைரியமாகப் பதிலை எதிர்கொண்டு ஜனநாயக ரீதியாக தங்கள் கருத்துகளை முன்வைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இந்த நிகழ்வுகள் தேர்வு முறையின் நம்பகத்தன்மை, மாணவர் உரிமைகள் மற்றும் ஜனநாயக விவாதத்தின் முக்கியத்துவம் குறித்த விவாதங்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.

இதையும் படிங்க: "மன்னிப்பு கேட்கவே மாட்டேன்!" - அமித் ஷா விவகாரத்தில் ராகுல் காந்தி உறுதி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share