×
 

மழைக்கால கூட்டத்தொடர் 2ஆம் நாள் அமர்வு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு...

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் இரண்டாம் நாள் அமர்வு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 (நேற்று) முதல் ஆகஸ்ட் 12 வரை டெல்லியில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தொடரில் மத்திய அரசு வரி விதிப்பு, விளையாட்டு, கல்வி, சுரங்கம், கப்பல் போன்ற துறைகள் தொடர்பாக 8 முக்கிய மசோதாக்களை அறிமுகம் செய்து நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் பல முக்கிய பிரச்சினைகளை எழுப்பவும், அரசுக்கு நெருக்கடி கொடுக்கவும் வியூகம் வகுத்துள்ளன.

பொருளாதார மந்தநிலை, வேலையின்மை, விவசாயிகள் பிரச்சினைகள், மற்றும் பணவீக்கம் போன்ற முக்கிய விவகாரங்களை எழுப்ப திட்டமிட்டுள்ளன. சில மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும், அரசுக்கு அழுத்தம் கொடுக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளன. முக்கியமாக பகல்காம் தாக்குதல் தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளிகையில் ஈடுபட்டதால் நேற்று இரு அவைகளும் முடங்கின.

இந்த நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் இரண்டாம் நாள் கூட்டம் தொடங்கியது. ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், மாநிலங்களவை துணைத் தலைவராக உள்ள ஹரிவன்ஷ் மாநிலங்களவையை நடத்துகிறார். தனது ராஜினாமா முடிவை திரும்ப பெற போவதில்லை என்பதில் ஜெகதீப் தன்கர் திட்டவட்டமாக உள்ளார். 

இதையும் படிங்க: எந்த கேள்விக்கும் பதில் சொல்ல மாட்டாரு.. பிரதமரின் உரை குறித்து டி.கே.எஸ். இளங்கோவன் விமர்சனம்..!

இந்த நிலையில், நாடாளுமன்றம் மழைக்கால கூட்டத்தொடரின் இரண்டாம் நாள் அமர்வு தொடங்கிய சில நிமிடங்களிலேயே மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. மக்களவை சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டுத் தொடர்ந்து எதிர்க் கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகளின் நடவடிக்கை காரணமாக மக்களவை நிகழ்வுகளை நண்பகல் 12 மணி வரை சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்தி வைத்தார். நாடாளுமன்றத்தில் இருந்து வெளிநடப்புச் செய்த இந்தியா கூட்டணி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மோடி சார், நோ சார் என்ற பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: நாடு-னு வரும்போது ஒற்றுமை அவசியம்.. எதிர்க்கட்சிகள் புரிஞ்சுக்கணும்! பிரதாப் ராவ் வலியுறுத்தல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share