×
 

பூதாகரமாக வெடித்த 100 நாள் வேலை பெயர் மாற்றம்... நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்...!

100 நாள் வேலை திட்டத்தின் பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் போராட்டம் நடத்தினர்.

கிராமப்புறங்களில் வறுமையை ஒழிக்க மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் மத்திய அரசால் கடந்த 25ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி 100 நாட்கள் வேலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கான அட்டை வைத்திருப்பவர்கள் வேலை தேவைப்பட்டால் அந்த நபர்களுக்கு ஆண்டுக்கு குறைந்த பட்சம் 100 நாட்கள் வேலை அளிக்கப்படும் என்ற உத்தரவாதத்தை அளிக்கும்.

கிராமப்புறத்தில் வசிக்கும் வயதானவர்களை மனதில் வைத்து இந்த திட்டம் உருவாக்கப்பட்டது. வயதான காலத்திலும் அவர்களுக்கு ஊதியம் கிடைக்க உதவி செய்கிறது. குளம், ஏரி ஆழப்படுத்துதல், கால்வாய் புனரமைப்பு, சாலை அகலப்படுத்துதல் என பல்வேறு பணிகளில் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்றியதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மகாத்மா காந்தி மீது மத்திய பாஜக அரசுக்கு இருக்கும் காழ்ப்புணர்ச்சி வெளிப்பாடு என்றும் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் 100 நாள் வேலைத்திட்டம் தொடர்பான விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பின. இது தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தப்பட்டது. 100 நாள் வேலை தொடர்பாக விவாதிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: 2001-ல் நடந்த பயங்கர சம்பவம்..!! நாடாளுமன்றத்தில் உயிர்நீத்த பாதுகாப்பு படை வீரர்களுக்கு மரியாதை..!!

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினர். 100 நாள் வேலைத் திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை நீக்கி, புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாடாளுமன்ற வளாகத்தில் கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு விளக்கங்களை எழுப்பி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர். 

இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் விவகாரம்... பாஜக எம். பி. பேச்சால் நாடாளுமன்றத்தில் சர்ச்சை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share