முதலமைச்சர் தொகுதியில் இப்படியா?... கொதித்தெழுந்த பெரம்பூர் மக்கள்... நடுரோட்டில் ஆவேசம்...!
முதலமைச்சர் விஜயின் தொகுதியான பெரம்பூர் தொகுதியில், தொடர் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் தற்போது சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முதலமைச்சர் விஜயின் தொகுதியான பெரம்பூரில், தொடர் மின்வெட்டு பிரச்சினையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக, பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட தேசிங்க நந்தபுரம், சுந்தரம் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், வீடுகளில் இருக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
மின்வாரிய அதிகாரிகளைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தபோதும், அவர்கள் முறையான பதில் அளிக்கவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். குறிப்பாக, மின் பொறியாளர் இந்தப் பகுதிக்கு நேரில் வந்து மக்களின் குறைகளைக் கேட்காமல், அவரது ஓட்டுநரின் செல்போன் எண்ணை மட்டும் கொடுத்துச் சென்றதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: காமராஜர் காலை உணவு திட்டம்... ஊட்டச்சத்து உணவுகள்..! முதல்வர் விஜய் கறார்..!!
இந்தப் பகுதியில் முறையாக மின்சாரம் வழங்கப்படாததால், பள்ளி மாணவர்கள் படிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், கடும் வெயிலும், தாங்க முடியாத உஷ்ணமும் நிலவி வரும் நிலையில், வீடுகளில் இருக்க முடியாமல் முதியவர்கள் மற்றும் நோயாளிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், மின்வாரிய அதிகாரிகள் இந்தப் பகுதியில் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி ஆத்திரமடைந்த பொதுமக்கள், தற்போது யாசர்பாடி மூர்த்திங்க தெருவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், இப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக மின்வாரிய அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் தங்களது பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்றும், தங்களிடம் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முதலமைச்சர் விஜயின் தொகுதியான இந்தப் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக மின்சாரம் தடைபட்டுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதனிடையே, இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும், தமிழகத்தின் முதலமைச்சராகவும் இருக்கும் ஜோசப் விஜய் மக்களின் பிரச்சினையை கண்டுகொள்வதில்லை என்றும், அவர் லண்டன் செல்வதிலேயே குறியாக இருக்கிறார் என்றும் பொதுமக்கள் கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.
கடந்த மூன்று நாட்களாக மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் கடும் சிரமத்திற்கு ஆளான பொதுமக்கள், தற்போது சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து, போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், போலீசாரின் சமரசத்தை ஏற்க மறுக்கும் பொதுமக்கள், மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக தங்களுக்கு மின்சாரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: “விசில் போடு...” - சி.எம். விஜய் கவனத்தை ஈர்க்க விவசாயிகள் நூதன போராட்டம்... 4வது நாளாக அதிரடி...!