×
 

ராமர் குறித்த சர்ச்சை பேச்சு... ராகுலுக்கு வந்த புதிய சிக்கல்!!

ராமர் குறித்த சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாரணாசி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசிய தலைவரான ராகுல் காந்தி, தற்போது நாடாளுமன்ற லோக்சபா எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வருகிறார். இவர் பேசும் கருத்துகள் சர்ச்சையாகி வரும் நிலையில் அவர் மீது பாஜகவினர், இந்து அமைப்பினர் ஏராளமான வழக்குகளை தொடர்ந்துள்ளனர். தற்போது அந்த வகையில் அவரது சமீபத்திய பேச்சு ஒன்று சர்ச்சையானதை தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்ய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதம் அமெரிக்கா சென்ற ராகுல் காந்தி, அங்குள்ள பிரவுன் யுனிவர்சிட்டியில் பேசினார். அப்போது, கடவுள் ராமர் என்பது ஒரு புனைக்கதை. அப்படி ஒருவர் இல்லை என்ற வகையில் பேசியதாக கூறப்படுகிறது. அவரது இந்த கருத்து பெரும் சர்ச்சையானது. இதை அடுத்து வழக்கறிஞர் ஹரிசங்கர் பாண்டே நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.  

இதையும் படிங்க: சீனக்காரனின் பொம்மை டிரோனை பெருமை பேசிய ராகுல்.. இவரா தலைவர்..? சரிந்தது இமேஜ்..!

அந்த மனுவில், ராகுல் காந்தி இந்துக்களின் நம்பிக்கைக்கு எதிராக பேசியுள்ளார். இதனால் இந்துக்களின் மனம் புண்பட்டுள்ளது. ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பிஎன்எஸ் சட்டப்பிரிவு 196 (இருவேறு சமூகத்தினர் இடையே மதம், இனம் அடிப்படையில் பகையை ஏற்படுத்துதல்), 351 (மிரட்டல் உள்நோக்கம்), 353 (பொதுமக்களிடம் தவறான பிரசாரம் செய்தல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த மனுவில் காங்கிரஸ் கட்சியினர் மீதும் நடவடிக்கை கோரப்பட்டு இருந்தது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம் வரும் 19ம் தேதி மனுவை விசாரிப்பதாக கூறி ஒத்திவைத்தது. ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட மனுவை விசாரிக்க நீதிமன்றம் ஒப்புக்கொண்டது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: இன்று மாலை காங். காரிய கமிட்டி கூட்டம்! என்னென்ன விவாதிக்கலாம்... தீவிர ஆலோசனை நடத்த திட்டம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share