×
 

அதிர்ச்சி..!! பெட்ரோல், டீசல் விலை உயர்வு..! தலையில் இடியை இறக்கிய ஷெல் நிறுவனம்..!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தி ஷெல் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஷெல் நிறுவனம் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தியுள்ளது. பல மாதங்களாக உலக அளவில் ஏற்பட்டுள்ள எண்ணெய் சந்தை ஏற்ற இறக்கங்கள் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மத்திய கிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள இஸ்ரேல்-ஈரான் இடையிலான பதற்றம் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் கச்சா எண்ணெய் விலையை பீப்பாய்க்கு 100 டாலருக்கு மேல் உயர்த்தியுள்ளன.

இந்த சூழலில், உலகளாவிய எண்ணெய் சப்ளை சங்கிலியில் ஏற்பட்ட அழுத்தம் தனியார் எண்ணெய் நிறுவனங்களான ஷெல் உள்ளிட்டவற்றை விலை உயர்வுக்கு தள்ளியுள்ளது. ஷெல் இந்தியா தனது சில்லறை நிலையங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தியுள்ளது. Shell India நிறுவனம் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.25.01 உயர்த்தி உள்ளது.

பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.7.41 உயர்த்தி உள்ளது. இதன்மூலம் அந்நிறுவன பங்க்-களில் டீசல் லிட்டருக்கு ரூ.123.52 ஆகவும், பெட்ரோல் ரூ.119.85 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணம் உலக கச்சா எண்ணெய் விலையின் ஏற்றம் தான். மத்திய கிழக்கு பகுதியில் ஏற்பட்ட போர் மற்றும் அரசியல் பதற்றங்கள் காரணமாக கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து ஏறி வருகிறது.

இதையும் படிங்க: பிளாஸ்டிக் பக்கெட், பாட்டில்களுடன் சாரை சாரையாய் படையெடுக்கும் மக்கள்... திரும்பிய திசையெல்லாம் திண்டாட்டம்... திணறும் தமிழகம்...!

இதனால் இறக்குமதி செலவு அதிகரித்துள்ளது. ஷெல் போன்ற தனியார் நிறுவனங்கள் தங்களது இறக்குமதி, சுத்திகரிப்பு மற்றும் விநியோக செலவுகளை ஈடுகட்ட இந்த உயர்வை செயல்படுத்தியுள்ளன. மேலும், ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, சர்வதேச சந்தையில் ரிஃபைன்ட் ப்ராடக்ட்களின் விலை உயர்வு, போக்குவரத்து செலவுகள் மற்றும் நிலைய செயல்பாட்டு செலவுகள் ஆகியவையும் இந்த முடிவுக்கு பங்களித்துள்ளன.

இதையும் படிங்க: ஈரான் - இஸ்ரேல் போர் எதிரொலி: பைக்கு 2 லிட்டர்; காருக்கு 10 லிட்டர் - பெட்ரோல், டீசல் விநியோகத்திற்கு புதிய கட்டுப்பாடு...! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share