×
 

பெட்ரோல், டீசல் விலை குறையும்? வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்?! பெட்ரோலிய அமைச்சர் சொல்வது என்ன?!

பெட்ரோல், டீசல் போன்றவை குறைவான விலையில் விற்பனை செய்ததால், எண்ணெய் நிறுவனங்களுக்கு 74,781 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறியுள்ளார்.

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை அடக்க விலையைவிட குறைவாக விற்பனை செய்ததால், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு 74,781 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்தால், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைப்பது குறித்து பரிசீலிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறியிருப்பது வாகன ஓட்டிகளிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அவர் விளக்கமளிக்கையில், சர்வதேச சந்தையில் தற்போது கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்தாலும், மேற்காசியாவில் ஏற்பட்ட போர் பதற்றத்தின் போது அதிக விலைக்கு வாங்கப்பட்ட கச்சா எண்ணெயையே இந்திய நிறுவனங்கள் சுத்திகரித்து எரிபொருளாக விற்பனை செய்து வருவதாக தெரிவித்தார். இதன் காரணமாக, உற்பத்தி செலவு அதிகரித்த நிலையிலும், பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி சிலிண்டர்கள் அடக்க விலையைவிட குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

இந்த நடைமுறையால், கடந்த ஜூன் 30-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் எண்ணெய் நிறுவனங்களுக்கு மொத்தமாக 74,781 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். இருப்பினும், இந்த இழப்பை ஏற்றுக்கொண்டு நுகர்வோருக்கு கூடுதல் சுமை ஏற்படாத வகையில் அரசு செயல்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: மேற்காசிய மோதல் மேலும் தீவிரமடையலாம்?! போர் எப்போ முடியும்?! பெட்ரோலியம் அமைச்சர் தகவல்!

மேலும், அடுத்த சில வாரங்களிலும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைவாகவே இருந்தால், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க முடியுமா என்ற கேள்வி இயல்பான ஒன்றாகும் என்றும் ஹர்தீப் சிங் புரி தெரிவித்தார். இருப்பினும், அதுகுறித்த இறுதி முடிவு சந்தை நிலவரம், இறக்குமதி செலவு மற்றும் எண்ணெய் நிறுவனங்களின் நிதிநிலையை கருத்தில் கொண்டு எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மார்ச் முதல் ஜூன் மாதம் வரை நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு எந்தவித தட்டுப்பாடும் ஏற்படவில்லை என்றும், அதிக தேவை இருந்தபோதிலும் விநியோகம் சீராக நடைபெற்றதாகவும் அமைச்சர் கூறினார். 2022 முதல் 2026 வரை சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை முறையே 5.58 சதவீதம் மற்றும் 6.23 சதவீதம் உயர்ந்திருந்தாலும், அதன் முழு சுமையையும் நுகர்வோரிடம் சுமத்தாமல் இந்தியாவின் நிதி அமைப்பு சமாளித்ததாகவும் அவர் விளக்கமளித்தார்.

 

இதையும் படிங்க: டெல்லியில் பெட்ரோல் லிட்டர் ரூ.82க்கு விற்பனை! E- 85!! 85% எத்தனால் கலப்பால் குறைந்தது விலை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share