×
 

இலவச ஏசி தரும் மோடி அரசு... இணையத்தில் பரவியது உண்மையா? PIB விளக்கம்!!

இலவச ஏசி வழங்கவுள்ளதாக வெளியான தகவல் குறித்து மத்திய அரசின் உண்மை சரிபார்ப்பு பிரிவான பிஐபி விளக்கமளித்துள்ளது.

இந்தியா முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் மக்கள் தங்களில் வீடுகளில் ஏசி பயன்படுத்தி வருகின்றனர். இல்லாதவர்களும் புதிதாக வாங்க திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் மத்திய அரசு சார்பாக இலவசமாக ஏசி வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட உள்ளதாக வாட்ஸாப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் உள்ளிட்ட சமூகவலைதள பக்கங்களில் தகவல்கள் வெளியாகின. மேலும் மத்திய அரசு புதிதாக பிஎம் மோடி ஏசி யோஜனா 2025 என்ற திட்டத்தை அறிவித்துள்ளதாகவும் இதன் கீழ் இலவசமாக ஏசி யூனிட்கள் வழங்கப்படும் என்றும் தகவல் பரவி வந்தது.

இத்திட்டத்தின் கீழ் 5 ஸ்டார் ஏசி இலவசமாக வழங்கப்பட உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இதற்காக 1.5 கோடி ஏசி யூனிட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அடுத்த மாதம், அதாவது மே 2025 முதல் இத்திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தவுள்ளதாகவும் கூறப்பட்டது. இது தொடர்பாக மத்திய மின்சார துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தியுள்ளதாகவும் இத்திடத்திற்குத் தேவையான ஏசி யூனிட்களை ஏற்கனவே தயார் செய்துவிட்டதாகவும் அதில் கூறப்பட்டு இருந்தது.

இதையும் படிங்க: வாட்டி வதைக்க போகும் வெயில்... ஷாக் கொடுத்த தமிழ்நாடு வெதர்மேன்!!

பலரும் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி என்பது குறித்து இணையத்தில் தேட தொடங்கினர். ஆனால், இதுக்குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையத்தில் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இலவச ஏசி வழங்கவுள்ளதாக வெளியான தகவல் போலியானது என மத்திய அரசின் உண்மை சரிபார்ப்பு பிரிவான பிஐபி விளக்கமளித்துள்ளது.

இதுகுறித்த எக்ஸ் தள பதிவில், பிரதமர் மோடி ஏசி யோஜனா 2025 திட்டத்தின் கீழ், அரசு இலவச 5 ஸ்டார் ஏசி யூனிட்களை வழங்கவுள்ளதாகவும் இதற்கு 1.5 கோடி ஏசிகள் தயார் நிலையில் உள்ளதாகவும் சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது. ஆனால், இந்தத் தகவல் போலியானது. இலவசமாக 5 ஸ்டார் ஏசிக்களை வழங்கும் வகையில் எந்தவொரு திட்டமும் மின்சார அமைச்சகத்தால் அறிவிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 3 நாட்களுக்கு வெய்யிலுக்கு டாடா, bye bye.. கனமழை பெய்வதற்கான மஞ்சள் அலெர்ட்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share