அதிகாலையில் கேட்ட அலறல் சத்தம்... அப்பளம் போல் நொறுங்கிய வேன் - 7 குழந்தைகள் உட்பட 11 பேர் துடிதுடித்து பலி...!
ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று அதிகாலை நடந்த ஒரு துயரமான சாலை விபத்தில் 10 பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் தௌசா மாவட்டத்தில் உள்ள பாபி அருகே இன்று அதிகாலை நடந்த கோர விபத்தில் 11 பக்தர்கள் உயிரிழந்தனர் மற்றும் 9 பேர் காயமடைந்தனர். காது ஷியாம் கோயிலில் இருந்து திரும்பி வந்த பக்தர்களை ஏற்றிச் சென்ற பயணிகள் பிக்அப் வேனும் அதிவேகமாக வந்த கன்டெய்னர் லாரியும் மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
கன்டெய்னர் லாரி வேகமாக மோதியதால் பிக்அப் வேனின் முன்பகுதி முற்றிலும் உருகுலைந்து சேதமடைந்தது. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். அதேசமயம், 14 பேர் காயமடைந்தனர், அவர்களில் 9 பேர் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்தவர்களில் ஏழு குழந்தைகள் மற்றும் இரண்டு பெண்கள் அடங்குவர்.
படுகாயமடைந்த சுமார் 9 பேர் ஜெய்ப்பூரில் உள்ள எஸ்எம்எஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் காயமடைந்த 3 பேருக்கு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதற்கட்ட விசாரணையில், இந்த பயங்கர மோதல் அதிவேகத்தால் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: தலைக்குப்புற கவிழ்ந்த ஈச்சர் வேன்; இபிஎஸ் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டுச் சென்றவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்...!
விபத்துக்குப் பிறகு, லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிய நிலையில், போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிர்வாகம் ஆறுதல் தெரிவித்துள்ளதுடன், சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளது.
பக்தர்கள் அனைவரும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. அவர்கள் காது ஷியாம் மற்றும் சலசர் பாலாஜி கோயில்களில் தரிசனத்தை முடித்துக்கொண்டு சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்த நிலையில் இந்த விபத்தானது நேர்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: குழிக்குள் விழுந்த ரோபோ டாக்சி.. ஏணியை பிடித்து மேலே வந்த பெண் பயணி.. என்ன நடந்தது..?