×
 

விவசாயிகளுக்கான பிஎம் கிசான் திட்டம்.. 20வது தவணைத்தொகை விடுவிப்பு தேதி அறிவிப்பு..!!

பிஎம் கிசான் திட்டத்தின் 20வது தவணைத்தொகை விடுவிப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி (PM-KISAN) திட்டம், கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கப்பட்ட ஒரு மத்திய அரசு திட்டமாகும். இது சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டது. இத்திட்டத்தின் கீழ், 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாய குடும்பங்களுக்கு 4 மாதத்திற்கு ஒரு முறை தலா ரூ.2000/- வீதம் மூன்று தவணைகளில் ஆண்டுக்கு ரூ.6,000/- விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடிப் பணப்பரிமாற்றம் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை, 11 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ.3.69 லட்சம் கோடி விநியோகிக்கப்பட்டுள்ளது, இதில் 30 மில்லியன் பெண் விவசாயிகளும் பயனடைந்துள்ளனர்.

2025ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி அன்று, பீகாரின் பாகல்பூரில் 19வது தவணையாக ரூ.22,000 கோடி 9.8 கோடி விவசாயிகளுக்கு விடுவிக்கப்பட்டது. 20வது தவணை ஜூலை மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 20வது தவணைத்தொகை வரும் ஆகஸ்ட் 2ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: #BREAKING நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் அதிரடி திருப்பம் - சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்...!

இந்த அறிவிப்பை உறுதிப்படுத்தும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிஎம் கிசான் திட்ட பயனாளர்களான 9 கோடியே 70 லட்சம் விவசாயிகளுக்கு, 20 ஆயிரத்து 500 கோடி ரூபாயை விடுவிக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை மத்திய வேளாண் துறை அமைச்சர் ஷிவராஜ் சிங் சவுகான் மேற்பார்வையிட்டு வருகிறார்

20வது தவணையைப் பெற, விவசாயிகள் இ-கேஒய்சி (e-KYC) செயல்முறையை முடிக்க வேண்டும், மேலும் ஆதார் எண்ணுடன் வங்கிக் கணக்கு இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இதை pmkisan.gov.in இணையதளத்தில் OTP அல்லது பயோமெட்ரிக் முறையில் செய்யலாம். இ-கேஒய்சி முடிக்காதவர்களுக்கு தொகை வழங்கப்படாது.

மேலும், விவசாயிகள் தங்கள் பயனாளி நிலையை (Beneficiary Status) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆதார் அல்லது மொபைல் எண்ணைப் பயன்படுத்தி சரிபார்க்க வேண்டும். தவறான வங்கி விவரங்கள் அல்லது ஆதார் இணைப்பு இல்லாமை தொகை பரிமாற்றத்தில் தாமதத்தை ஏற்படுத்தலாம்.

இந்தத் தவணை, கரீப் பருவத்திற்கு முன் விவசாயிகளுக்கு முக்கிய நிதி ஆதரவை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து விவசாயிகளும் தங்கள் ஆவணங்களைச் சரிபார்த்து, அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 

 
 
 

 

இதையும் படிங்க: இந்தியாவின் மனைவி பாக்., ராஜஸ்தான் எம்.பி. கருத்தால் லோக்சபாவில் சிரிப்பலை..

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share