பிரதமர் மேல நம்பிக்கை இருக்கு! விரைவில் நல்ல முடிவு வரும்... முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை
மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பிரதமர் பதிலளிப்பார் என்ற நம்பிக்கை உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 21ஆம் தேதி உடல் நலக்குறைவு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்தபடியே, பிரதமரிடம் கோரிக்கை மனுவை அளிக்க ஆலோசனை நடத்தி இருந்தார். வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பான கோரிக்கை மனுவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஒப்புதல் அளித்த நிலையில், தமிழகத்திற்கு வருகை தந்துள்ள பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் ஸ்டாலின் சார்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு கோரிக்கை மனுவை அளித்தார்.
இந்த நிலையில், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பிரதமர் பதிலளிப்பார் என்ற நம்பிக்கை உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறி உள்ளார்.
இதையும் படிங்க: "I belongs to Dravidian stock"... புதிதாக பொறுப்பேற்கும் எம்.பிக்களுக்கு முதல்வர் உற்சாக வாழ்த்து..!
தமிழ்நாட்டு மாணவர்களின் கல்விக்கான நிதி, ஏழை நடுத்தர மக்களின் போக்குவரத்துக்காக இரயில் திட்டங்கள், மீனவர்களின் வாழ்வாதாரம், சேலம் பாதுகாப்புத் தொழிற்பூங்கா ஆகியவற்றை வலியுறுத்தி மாண்புமிகு பிரதமர் மோடியிடம் கோரிக்கை மனுவை அளித்துள்ளதாக தெரிவித்தார். மக்களின் உணர்வுகளுக்கும் மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மதிப்பளித்து உரிய தீர்வினைப் பிரதமர் வழங்குவார் என்று நம்புவதாக கூறினார்.
இந்திய மீனவர்கள் தொடர்ச்சியாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்பாகவும், மீனவர்களையும் அவர்களது படகுகள் மற்றும் உபகரணங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மனுவில் விடுக்கப்பட்டுள்ளன.
மேலும் சேலம் உருக்காலை மிகை நிலங்களை பாதுகாப்பு தொழில் பூங்காவிற்கு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: எல்லாம் சரியா நடக்குதா? எதுவும் மிஸ் ஆக கூடாது! உங்களுடன் ஸ்டாலின் முகாம் தொடர்பாக முதல்வர் ஆலோசனை..!