நெருக்கடிகள் வேண்டாம்... நிதியை கொடுங்கள்! முதல்வரின் கோரிக்கை மனுவை பிரதமரிடம் வழங்கிய அமைச்சர்
முதலமைச்சர் ஸ்டாலின் சார்பில் பிரதமர் மோடியிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு கோரிக்கை மனுவை வழங்கினார்.
முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 21ஆம் தேதி தலை சுற்றல் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
மருத்துவமனையில் இருந்தபடியே பல்வேறு அரசு பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடியிடம் தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பான கோரிக்கை மனுவை அளிக்க ஆலோசனை நடத்தி இருந்தார். வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பான கோரிக்கை மனுவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஒப்புதல் அளித்த நிலையில், இந்த நிகழ்வின் போது கனிமொழி எம்பி, உள்ளிட்டோர் உடன் இருந்தனர்
மருத்துவமனையில் இருப்பதால் பிரதமரிடம் வழங்குவதற்கான கோரிக்கைகள் அடங்கிய உணவை தலைமைச் செயலாளர் மூலமாக கொடுத்து அனுப்பியுள்ளதாகவும், நிதி, மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கோரிக்கை உணவை பிரதமரிடம் வழங்குவார் என்று முதலமைச்சர் கூறியிருந்தார். இந்த நிலையில் தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்துள்ள பிரதமர் மோடியிடம் முதலமைச்சர். மு க ஸ்டாலின் சார்பில் கோரிக்கை மனுவை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார். சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் ரூ.2,151.59 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: களைகட்டிய சோழதேசம்! பிரதமர் கொண்டு வரும் முக்கிய பொருள் என்ன தெரியுமா?
மேலும், பி.எம் ஸ்ரீ புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை நிபந்தனையாக வைக்காமல் உரிய நிதியை விடுவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது ரயில்வே திட்டங்களுக்கு உடனடியாக நிதி விடுவிக்க வேண்டும் என்றும் கோயம்புத்தூர் மற்றும் மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கவும் மனைவி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திருச்சியில் பிரதமர் நரேந்திர மோடி... அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு...!