ஆஹா...!! இவ்வளவு விஷயம் இருக்கா??... ரஷ்ய அதிபர் புதினுக்கு 6 பரிசுகளை அள்ளிக் கொடுத்த மோடி... அப்படி என்ன ஸ்பெஷல்...!
ரஷ்யா புறப்பட்ட அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி 6 சிறப்பு பரிசுகளை வழங்கி கெளரவித்துள்ளார். அவை என்னவென பார்க்கலாம்...
இந்தியாவிற்கு வருகை புரிந்த ரஷ்ய அதிபர் புதினுக்கு, பிரதமர் நரேந்திர மோடி அஸ்ஸாம் தேயிலை, வெள்ளி கலைப்பொருட்கள் என நமது நாட்டின் பாரம்பரியத்தையும், கலையையும் பிரதிபலிக்கும் வகையிலான அசத்தலான பரிசுகளைக் கொடுத்துள்ளார்.
டிசம்பர் 4-5 தேதிகளில் இந்தியாவில் நடந்த உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமீர் புதின் வருகை தந்திருந்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடியும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் நேற்று விரிவான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த சந்திப்பின் நிறைவாக ரஷ்யா புறப்பட்ட அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி 6 சிறப்பு பரிசுகளை வழங்கி கெளரவித்துள்ளார். அவை என்னவென பார்க்கலாம்...
பிரதமர் மோடி வழங்கிய பரிசுகளில் அதிக கவனம் ஈர்ப்பது பளிங்கு சதுரங்க தொகுப்பு. பளிங்கு கற்கள் மற்றும் மரத்தால் உருவாக்கப்பட்ட இந்த சதுரங்க பலகையும், அதில் உள்ள காய்களும் உத்தரபிரதேச மாநிலத்தின் ஆக்ராவில் நேர்த்தியான கைவினைத்திறனுக்கு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: ரஷ்ய அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி கொடுத்த அன்பு பரிசு..!! நெகிழ்ச்சி தருணம்..!!
பிரம்மபுத்திராவின் வளமான சமவெளிகளில் வளர்க்கப்படும் அஸ்ஸாமின் கருப்பு தேநீர் மற்றும் காஷ்மீரின் மலைப்பகுதிகளில் வளர்க்கப்படும் தனித்துவமான நறுமணமும், அடர்ந்த நிறமும் கொண்ட குங்குமப்பூவும் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பரிசுகளும் இந்தியாவின் வடகிழக்கு மற்றும் வடக்குப் பகுதிகளின் விவசாய செழுமையை பிரதிபலிக்கின்றன.
புடினுக்கு வழங்கப்பட்ட பரிசுகளில் மிக முக்கியமானது ஸ்ரீமத் பகவத் கீதையின் பிரதி. இது ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ஆன்மீக பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் வகையில் இது ரஷ்ய அதிபருக்கு பரிசளிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா இந்தியா ஆகிய இரண்டு நாடுகளும் தேயிலையுடன் ஆழமான கலச்சார முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன. இதனை பிரதிபலிக்கும் வகையில், முர்ஷிதாபாத் வெள்ளி தேநீர் கோப்பை செட், மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் கைவினைஞர்களால் உருவாக்கப்பட்ட இது, நுட்பமான சிற்பங்கள் மற்றும் கலைத்திறனை பிரதிபலிக்கிறது.
இறுதியாக மகாராஷ்டிராவில் உள்ள கைவினைக் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட வெள்ளி குதிரை சிலை, இந்திய மற்றும் ரஷ்ய கலாச்சாரங்களில் கொண்டாடப்படும் கண்ணியம் மற்றும் வீரத்தை அடையாளப்படுத்தும் இது, பகிரப்பட்ட பாரம்பரியத்தையும் பரஸ்பர மரியாதையையும் பிரதிபலிக்கிறது.
இதையும் படிங்க: இன்று இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்..!! இரவு விருந்து வழங்கும் பிரதமர் மோடி..!!