ஆப்ரேஷன் சிந்தூரின் வெற்றி..! விமானப்படை வீரர்களை நேரில் சென்று பாராட்டிய பிரதமர்..!
ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்று வெற்றி பெறச் செய்த வீரர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி பாராட்டி உள்ளார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பழி வாங்கும் விதமாக, ஆப்ரேஷன் சிந்துார் என்ற ராணுவ நடவடிக்கையை இந்திய ராணுவம் துவங்கியது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து, நம் நாட்டின் மேற்கு எல்லையையொட்டிய பகுதிகளில் ட்ரோன்கள், ஏவுகணை தாக்குதல்களை பாகிஸ்தான் நடத்தியது. எனினும், பாகிஸ்தான் அனுப்பிய ட்ரோன்கள், ஏவுகணைகளை இந்திய விமான படையினர் வழிமறித்து தாக்கி அழித்தனர்.
பாகிஸ்தானின் விமானப்படை தளங்கள் மற்றும் இரண்டு ரேடார் மையங்கள் தகர்க்கப்பட்டன. இப்படியாக பாகிஸ்தானுக்கு சம்மட்டி அடி கொடுத்ததில் விமானப்படையின் பங்கு அளப்பரியது. பாகிஸ்தான் ஒரு அடி எடுத்து வைத்தால் இந்தியா பல அடி முன்சென்று பதிலடி கொடுத்து மிரட்டி வருகிறது. இதனால் பதறிப்போன பாகிஸ்தான் தாக்குதலை நிறுத்த கெஞ்சியது. இந்தியாவின் இந்த பலத்தை காண்பிக்க உறுதுணையாக முப்படை வீரர்களும் இருந்துள்ளனர்.
இந்த நிலையில் ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்று வெற்றி பெறச் செய்த வீரர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி பாராட்டி உள்ளார். பஞ்சாப் மாநிலம் ஆதம்பூர் விமானப் படை தளத்தில் வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார்.
இதையும் படிங்க: முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை..! அமைதி உடன்படிக்கை குறித்து விவாதம்..!
தீவரவாதிகளை ஒழிப்பதற்கான ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்றதற்காக பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து விமானப்படை வீரர்களுடன் பிரதமர் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார். தொடர்ந்து விமானப்படை வீரர்களுடன் வந்தே மாதரம் என்று பிரதமர் மோடி முழக்கமிட்டார்.
இதையும் படிங்க: பரபரப்பான சூழலில் நாளை கூடுகிறது மத்திய அமைச்சரவை கூட்டம்..! முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதம்..!