×
 

வெறி ஏற்றிய பாகிஸ்தான்.. மொத்தமாய் முடிக்க ரெடி..! இந்தியாவின் "மாஸ்டர் பிளான்"..!

இந்தியா மீது தொடர்ந்து பாகிஸ்தான் தாக்குதல் முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் பிரதமர் மோடியை பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்து முக்கிய ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

இந்தியா மீது மீண்டும் ட்ரோன் தாக்குதல் நடத்தியது பாகிஸ்தான். ஜம்மு காஷ்மீரில் பாரமுல்லா, ஸ்ரீநகர், அவந்திபுரா, ஜம்மு., பஞ்சாப் மாநிலத்தின் பெரோஸ்பூர், பதான்கோட், பசில்கா., குஜராத் மாநிலத்தின் புஜ், குவார்பெட், லக்கினலா உள்ளிட்ட இடங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் முயற்சி நடத்தி உள்ளது. 

பாகிஸ்தான் தாக்குதல் முயற்சிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக எல்லையில் இந்திய ராணுவம் பீரங்கி தாக்குதல் நடத்தியது. ஜம்மு காஷ்மீர் எல்லையில் இருந்து பாகிஸ்தானுக்கு பீரங்கி மூலமாக தக்க பதிலடி கொடுத்தது இந்திய ராணுவம். பாகிஸ்தானில் தாக்குதல்கள் தொடரும் நிலையில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்து முக்கிய ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

இதையும் படிங்க: ராஜ்நாத் சிங் - முப்படை தளபதிகளோடு பிரதமர் மோடி ஆலோசனை.. இன்று இரவு நடக்கபோவது என்ன?

பாகிஸ்தானின் தாக்குதல்களை எதிர்கொள்வது தொடர்பாகவும், மக்களின் பாதுகாப்பு குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாகவும், பதிலடி தாக்குதல்கள் குறித்தும் பிரதமரிடம் அவர் எடுத்துரைத்து வருவதாக கூறப்படுகிறது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் தேசிய பாதுகாப்பு குழு தலைவர் அஜித் தோபால் சந்திப்புள்ளார் பாகிஸ்தான் தாக்குதல்கள் தொடரும் நிலையில் டெல்லியில் பிரதமர் இல்லத்தில் அஜித்துவால் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

இதையும் படிங்க: அடங்காத பாகிஸ்தான்..! சுக்கு நூறாக்கிய இந்தியா.. திக் திக் நிமிடங்கள்.. விக்ரம் மிஸ்ரி விளக்கம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share