அத்துமீறும் பாக்., தணியாத பதற்றம்..! பிரதமருடன் பாதுகாப்பு ஆலோசகர் தீவிர ஆலோசனை..!
எல்லையில் போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில் பிரதமர் மோடியை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மீண்டும் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் அப்பாவி இந்தியர்கள் கொல்லப்படுகின்றனர். இதனால் எல்லையில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதன் காரணமாக எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாது முப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தான் ராணுவம் கடல் வழியாகவோ, வான் வழியாகவோ அல்லது நிலத்தின் வழியாகவோ தாக்குதல் நடத்தினாலும் அதனை எதிர்கொள்ளும் விதமாக முப்படை வீரர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் ஒன்று கூட கூடாது, அவசியமின்றி வெளியில் செல்லக்கூடாது, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதையும் படிங்க: தமிழகத்தில் 'வீரவேல் வெற்றிவேல்' ஆபரேஷன்.. 2026 தேர்தலுக்காக நயினாரின் அதிரடி அறிவிப்பு!
இந்த நிலையில் பிரதமர் மோடியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மீண்டும் சந்தித்து தீவிர ஆலோசனை நடத்தினார். பாகிஸ்தானை எதிர்கொள்வது தொடர்பாகவும், அத்துமீறி தாக்குதல் நடத்தும் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விவகாரம் குறித்தும் பல்வேறு முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கு பால் அபிஷேகம்; தமிழகத்துக்கு கடும் விமர்சனம்... வைரலாகும் எக்ஸ் தள பதிவு!!