×
 

தூக்கியடிக்கப்போகும் மோடி! கட்சிப்பணிக்கு திரும்பும் அமைச்சர்கள்! மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றி அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் விரைவில் முக்கிய மாற்றங்கள் நடைபெறலாம் என்ற தகவல் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சரவை பதவிகளில் மாற்றம், சில புதிய முகங்களுக்கு வாய்ப்பு, சில அமைச்சர்களுக்கு கட்சிப் பொறுப்பு மற்றும் பல மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மூன்றாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். தற்போது ஆட்சி இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், அடுத்த கட்ட நிர்வாக நடவடிக்கைகளுக்காக அமைச்சரவையை மாற்றியமைக்கும் ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தது இந்த தகவலுக்கு மேலும் முக்கியத்துவம் அளித்துள்ளது.

பாஜக வட்டாரங்களில் வெளியாகும் தகவலின்படி, சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்படலாம். சிலர் கட்சிப் பணிகளுக்கு மாற்றப்படுவதுடன், புதிய தலைவர்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள உத்தர பிரதேசம், பஞ்சாப் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அந்த மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ஸ்லோவாக்கியா பல்கலைக்கழகத்தில் "ஏஐ இந்தியா இருக்கை"! பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சி!

மேலும், முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய துறைகளுக்கு தனி கவனம் செலுத்தும் வகையில் புதிய பொறுப்புகள் உருவாக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சில அமைச்சர்கள் ஆளுநர்களாக நியமிக்கப்படுவதற்கும் வாய்ப்பு இருப்பதாக டெல்லி அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

அடுத்த மாதம் தொடங்க உள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்பாகவே இந்த மாற்றங்கள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், பிரதமர் மோடி முக்கிய முடிவுகளை கடைசி நேரம் வரை ரகசியமாக வைத்திருப்பது வழக்கமாக இருப்பதால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை எந்த தகவலையும் உறுதிப்படுத்த முடியாது. அமைச்சரவை மாற்றம் குறித்த இறுதி அறிவிப்பை அரசியல் வட்டாரங்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளன.

இதையும் படிங்க: பிரதமர் மோடி அளிக்கும் இரவு விருந்து! சற்று நேரத்தில் புறப்படுகிறார் முதல்வர் விஜய்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share