×
 

"தே.ஜ கூட்டணியில் புதிய வரவு!" - டெல்லி எம்பிக்கள் கூட்டத்தில் NCPI கட்சி முதல்முறையாக பங்கேற்பு!

டில்லியில் நடந்த தே.ஜ கூட்டணி எம்பிக்கள் ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  புதிதாக உருவாக்கப்பட்ட இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சியினர் முதல் முறையாக கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

தலைநகர் டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) நாடாளுமன்ற எம்பிக்கள் ஆலோசனை கூட்டத்தில், புதிதாகத் தொடங்கப்பட்ட 'இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சி' (NCPI) முதன்முறையாகப் பங்கேற்றுத் தனது ஆதரவை அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்துள்ளது. 

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் சூழலில், டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள ஜி.எம்.சி. பாலயோகி அரங்கில் தே.ஜ கூட்டணியின் எம்பிக்கள் பங்கேற்ற 'மங்கள் விலாஸ்' (Mangal Milan) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

இக்கூட்டத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார். இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசியத் தலைவரும் மத்திய அமைச்சருமான ஜே.பி. நட்டா மற்றும் கூட்டணிக் கட்சிகளின் எம்பிக்கள் பலர் கலந்துகொண்டனர்.  

இதையும் படிங்க: ஆகஸ்ட் 4-இல் வைகோவின் புத்தக வெளியீடு! ராகுல் காந்தி வெளியிட அகிலேஷ் பெற்றுக்கொள்கிறார்!

இக்கூட்டத்தில் மிக முக்கிய அம்சமாக, திரிணாமுல் காங்கிரஸ் (TMC) கட்சியிலிருந்து விலகிப் புதிதாக உருவாக்கப்பட்ட 'இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சி'யின் (Nationalist Citizens Party of India - NCPI) எம்பிக்கள் முதல்முறையாகக் கலந்துகொண்டனர்.

 சுதீப் பந்தோபாத்யாய, காகோலி கோஷ் தஸ்திதார், சதாப்தி ராய் உள்ளிட்ட 20 எம்பிக்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றுத் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தங்களது முழு ஆதரவை தெரிவித்தனர்.

 

கூட்டத்தில் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள முக்கிய மசோதாக்கள், தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான புதிய சட்டங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக ஒப்பந்தங்கள் (FTA) குறித்து விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டது. 

புதிதாக இணைந்துள்ள எம்பிக்களுக்குப் பிரதமர் மோடி மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் தங்களது வாழ்த்துகளையும் வரவேற்பையும் தெரிவித்துக் கொண்டனர். 

 

இதையும் படிங்க: முடிவுக்கு வந்தது மாணவர்கள் போராட்டம்..!! டெல்லியில் அனைத்து மெட்ரோ நிலையங்களும் மீண்டும் திறப்பு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share