×
 

பிரேசிலில் பிரதமர் மோடிக்கு கிடைத்த கௌரவம்.. என்ன விருது தெரியுமா..?

பிரேசில் சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா ஆகிய ஐந்து நாடுகளுக்கு 8 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். உலகளாவிய தெற்கு நாடுகளுடனான இந்தியாவின் உறவுகளை வலுப்படுத்துவதும், பொருளாதாரம், எரிசக்தி, பாதுகாப்பு மற்றும் கலாச்சார ஒத்துழைப்பை மேம்படுத்துவதே இந்த பயணத்தின் முக்கிய நோக்கமாகும். இதற்காக டெல்லியில் இருந்து கடந்த 2ம் தேதி புறப்பட்டார் பிரதமர் மோடி.  

முதலில், அவர் கானா சென்றார். கானா நாட்டு ஜனாதிபதி ஜான் டிராமணி மஹாமாவின் அழைப்பின் பேரில் மோடி முதல் முறையாக கானாவுக்கு பயணம் மேற்கொண்டார். அங்கு அவருக்குப் ‘The Officer of the Order of the Star of Ghana’ என்ற உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்தியா-கானா இடையேயான உறவுகளை வலுப்படுத்தியதற்கும், கானாவின் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இந்தியாவின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையிலும் இந்த விருது வழங்கப்பட்டது. 

இதையும் படிங்க: பிரேசில் பறந்தார் பிரதமர் மோடி.! பிரிக்ஸ் மாநாட்டில் பாகிஸ்தானை கதறவிட காத்திருக்கும் சம்பவம்!!

இதனையடுத்து டிரினிடாட் மற்றும் டொபாகோவுக்கு சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டின் ஜனாதிபதி கிறிஸ்டின் கார்லா கங்காலூ மற்றும் பிரதமர் கம்லா பெர்சாத்-பிஸ்ஸேசரை சந்தித்தார். இந்திய வம்சாவளியினருடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

தொடர்ந்து அர்ஜென்டினா சென்ற பிரதமர் மோடி, விவசாயம், கனிமங்கள், எரிசக்தி, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டார். 

தொடர்ந்து 4வது நாடான பிரேசிலுக்கு சென்ற பிரதமர் மோடி, ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற 17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்றார். சர்வதேச அரங்கில் குளோபல் சவுத் நாடுகளுக்கான முக்கியத்துவத்தை அதிகரிக்க வேண்டும் என பேசிய அவர், பஹல்காம் தாக்குதல், பயங்கரவாதம் குறித்தும் கடுமையாக சாடி பேசினார். மேலும் உலகளாவிய நிர்வாக சீர்திருத்தங்கள், பருவநிலை மாற்றம், செயற்கை நுண்ணறிவு மற்றும் உலகப் பொருளாதாரம் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில், பிரதமர் மோடிக்கு பிரேசிலின் உயரிய விருதான (The Grand Collar of the National Order of the Southern Cross) தி கிராண்ட் காலர் ஆப் தி நேஷன் ஆர்டர் ஆல் தி சவுதன் கிராஸ் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. பிரேசில் அதிபரால் அந்நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது எனக்குமட்டுமல்ல 140 கோடி இந்தியர்களுக்கும் பெருமை என்று பிரதமர் மோடி தெரிவித்தார். 

பிரேசில் பயணத்தை முடித்தப்பின் பிரதமர் மோடி நமீபியா செல்கிறார். அங்கு அவர் நமீபியா அதிபர் நந்தி தைத்வாவை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். 


 

இதையும் படிங்க: டிரினிடாட் பிரதமர் கொடுத்த மறக்க முடியாத சர்ப்ரைஸ்.. அசந்து நின்ற மோடி.. பீகாரின் மகள் என கவுரவம்..

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share