டெல்லியில் எம்.பி.களுக்கான சொகுசு அபார்ட்மெண்ட்.. பிரதமர் மோடி திறந்து வைத்தார்..!!
பிரதமர் மோடி இன்று டெல்லியில் உள்ள பாபா கரக் சிங் மார்க்கில் எம்.பிக்களுக்காக புதிதாக கட்டப்பட்ட 184 டைப்-7 பல்நிலை குடியிருப்புகளை திறந்து வைத்தார்.
மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி.க்கள் பாராளுமன்ற கூட்டங்களில் கலந்து கொள்ள டெல்லி செல்லும்போது தங்குவதற்கு மத்திய அரசு வீடு ஒதுக்கீடு செய்து கொடுப்பது வழக்கத்தில் உள்ளது. தற்போது பாராளுமன்ற எம்.பி.க்களுக்காக டெல்லி பாபா கரன்சிங் மார்க் பகுதியில் பிரமாண்டமான அடுக்கு மாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது.
டெல்லியில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக (எம்.பி.க்கள்) பாபா கரக் சிங் மார்க் பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய பிரமாண்டமான 27 மாடி குடியிருப்பு வளாகம் கட்டப்பட்டுள்ளது. 4 இடங்களில் தலா 25 மாடிகளுடன் அந்த அடுக்கு மாடி குடியிருப்பு கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதில் 184 எம்.பி.க்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்ய வசதி செய்யப்பட்டு இருக்கிறது.
இதையும் படிங்க: ஷிபு சோரன் மறைவுக்கு அஞ்சலி.. மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு..!
இந்தக் கட்டிடத்தில் 184 பிரமாண்டமான அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன, இவை முன்பு எம்.பி.க்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த லுட்டியன்ஸ் டெல்லியிலுள்ள டைப்-VIII பங்களாக்களை விட பரப்பளவில் பெரியவை. ஒவ்வொரு குடியிருப்பும் ஐந்து படுக்கையறைகள், இரண்டு அலுவலக அறைகள், இரண்டு வேலை ஆட்களுக்கான அறைகள், நவீன சமையலறை மற்றும் பிற வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த வளாகத்தில் நிலத்தடி வாகன நிறுத்துமிடம், சமுதாய மையம் மற்றும் பசுமைப் பகுதிகள் உள்ளன. மேலும் இந்த வளாகம் பூகம்பத்தைத் தாங்கும் வகையில் கட்டப்பட்டு, GRIHA 3-நட்சத்திர மதிப்பீட்டு தரநிலைகளுக்கு இணங்கி, சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பங்களை உள்ளடக்கியுள்ளது. இது ஆற்றல் பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி மற்றும் கழிவு மேலாண்மையை மேம்படுத்துகிறது. இவை எம்.பி.க்களுக்கு வசதியான மற்றும் பாதுகாப்பான வாழ்க்கைச் சூழலை உறுதி செய்கின்றன.
இந்நிலையில் இந்த வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். மேலும் பிரதமர் ஒரு சிந்தூர் மரக்கன்றை நட்டு, கட்டுமானப் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் உரையாடி, பொதுமக்களிடையே உரையாற்றினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இந்த வளாகம் எம்.பிக்களின் வசிப்பிட பிரச்சனைகளைத் தீர்ப்பதோடு, அரசின் செலவுகளையும் மிச்சப்படுத்தும் என்றார். "2004 முதல் 2014 வரை ஒரு எம்.பி. குடியிருப்பு கூட கட்டப்படவில்லை. ஆனால், 2014 முதல் இதுவரை 350 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன," என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், இந்த வளாகத்தின் நான்கு கோபுரங்களுக்கு கிருஷ்ணா, கோதாவரி, கோசி மற்றும் ஹூக்ளி என இந்தியாவின் முக்கிய ஆறுகளின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன, இது நாட்டின் ஒற்றுமையை பிரதிபலிக்கிறது என்று மோடி தெரிவித்தார். இந்த வளாகத்தில் உயர்தர பாதுகாப்பு அமைப்பு, உயர்வேக லிஃப்ட்கள், மின்சார காப்பு, நவீன தீயணைப்பு வசதிகள் மற்றும் திவ்யாங்கர்களுக்கு உகந்த வசதிகள் உள்ளன. இந்த திட்டம், லுட்யன்ஸ் டெல்லியில் உள்ள பழைய குடியிருப்புகளை நவீனப்படுத்தும் மத்திய அரசின் முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.
இதையும் படிங்க: 127 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா திரும்பும் புத்தரின் புனித நகைகள்.! எலும்புகள்.!