×
 

கேட்டத செய்யல..! பிரதமர் மோடியை சந்திக்க தயார்... முதல்வர் ஸ்டாலின் உறுதி...!

மெட்ரோ ரயில் திட்டங்கள் தொடர்பாக பிரதமர் மோடியை சந்திக்க தயார் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் பெரிய நகரங்களான கோவை மற்றும் மதுரை, வேகமாக வளரும் தொழில் மற்றும் சுற்றுலா மையங்களாக உருமாற்றம் காண்கின்றன. கோவையில் தினசரி லட்சக்கணக்கான பணியாளர்கள் அவிநாசி சாலை மற்றும் சத்தியமங்கலம் சாலை போன்ற பரபரப்பான பாதைகளில் போக்குவரத்து நெரிசலில் சிக்குகின்றனர். அதேபோல், மதுரையில் திருமங்கலம் முதல் ஓதக்கடை வரையிலான பகுதிகள், மீனாட்சி அம்மன் கோயில் சுற்றுப்பகுதி மற்றும் பெரியார் பஸ் டெர்மினஸ் போன்றவை போக்குவரத்து அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளன. 

இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க, 2010-ஆம் ஆண்டு மத்திய அரசு 16 இரண்டாம் நிலை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களை அறிவித்தபோது, கோவை மற்றும் மதுரை இதில் சேர்க்கப்பட்டன. 2011-இல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் கீழ் இந்தத் திட்டங்கள் முறையாக அறிவிக்கப்பட்டன. 

தற்போது, கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்தது. மெட்ரோ ரயில் திட்டங்களை நிச்சயம் செயல்படுத்துவோம் என்றும் அதற்கான நடவடிக்கைகளை திமுக அரசு மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பிரதமரை சந்திக்கவும் தயார் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் வளர்ச்சியை இந்தியாவின் வளர்ச்சி என்ற கூறியுள்ள தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், கோவை மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் நிராகரிக்கப்பட்டதால் மக்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளதாக தெரிவித்தார். 

இதையும் படிங்க: கழிவறையில் காசு பார்த்து... குப்பை வண்டியில் வைத்து சோறு... நல்லா இருக்கு முதல்வரே... சாடிய நயினார்...!

அதற்கு துணை நிற்க உள்ள மதுரை மற்றும் கோவை மெட்ரோ திட்டத்திற்கு அனுமதி வழங்க பிரதமர் மோடி உடனடியாக தலையிட வேண்டும் என்று வலியுறுத்தி கொண்டார். அதற்காக பிரதமர் மோடியை எப்போது வேண்டுமானாலும் சந்திக்க தயாராக இருக்கிறேன் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதிப்பட கூறினார்.

இதையும் படிங்க: பட்டப் பகலில் படுகொலை... எப்படி தான் துணிச்சல் வருது? கொந்தளித்த சீமான்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share