×
 

தீவிரவாத அச்சுறுத்தலா? பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்கள் அதிரடியாக ஒத்திவைப்பு...

பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்கள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் தீவிரவாதிகளை அழிக்கும் முயற்சியாக ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் இன்று தாக்குதல் நடத்தியுள்ளது. பகல் காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் இந்த தாக்குதலை நிகழ்த்தியது.

பாகிஸ்தான் ராணுவமும் தாக்குதலை தொடங்கியுள்ளது. இந்த அசாதாரண சூழ்நிலை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி மேற்கொள்ள இருந்த வெளிநாட்டு பயணங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நாகரீக சமூகத்தில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை...டிகேஎஸ் இளங்கோவன் ஆவேசம்!

குரோஷியர், நார்வே, நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி செல்வதாக இருந்த நிலையில் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மே 13 முதல் 17 வரையிலான பயணம் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் திட்டமிட்டு இருந்த நிலையில் இந்தியாவில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஒத்தி வைக்கப்படுகிறது. 

இதையும் படிங்க: இந்திய ராணுவத்தின் நடவடிக்கைக்கு ராயல் சல்யூட்... தவெக தலைவர் விஜய் ஆதரவு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share