×
 

பீகார் காற்று தமிழகத்திலும் வீசுகிறது… இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பிரதமர் மோடி ஆரவாரப் பேச்சு…!

கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் விவசாயிகள் மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார். அப்போது, தமிழில் வணக்கம் எனக் கூறி பிரதமர் மோடி தனது உரையை தொடங்கினார். மருதமலை முருகனை தலை வணங்குகிறேன். டிஜிட்டல் வழியாக நிகழ்ச்சியை பார்க்கும் அனைவருக்கும் வணக்கம். சிறுவயதிலேயே தமிழ் மொழியை கற்று இருக்கலாம் என நான் அடிக்கடி நினைப்பேன். மாநாட்டில் வரவேற்பை பார்க்கும்போது

பீகாரின் காற்று தமிழகத்திலும் பேசுகிறதோ என தோன்றுகிறது. தொழில்துறையில் தென்னிந்தியாவின் சக்தி பீடம் கோவை. கோவையின் ஜவுளித்துறை நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி வருகிறது. கோவை மண்ணின் மைந்தர் நாட்டின் துணை ஜனாதிபதியாக வழிகாட்டி வருகிறார் என்று தெரிவித்தார்.

இயற்கை விவசாயம் மிகவும் சிறந்தது., எனது மனதிற்கு நெருக்கமானது. இயற்கை விவசாயத்தில் உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழ்கிறது. ஜிஎஸ்டி குறைப்பால் விவசாயிகள் பல்வேறு பலன்களை அடைந்துள்ளனர். இளைஞர்கள் விவசாயத்தை கையில் எடுத்துள்ளனர். விவசாயிகளுக்கு கடன் வழங்கி வருவதால் பலன்கள் கிடைத்துள்ளது. விவசாயிகள் கௌரவத் தொகை மற்றும் தமிழக விவசாயிகள் கணக்கில் வர வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு... விவசாயிகளுடன் கலந்துரையாடல்..! விழாக்கோலம் பூண்ட கோவை...!

 கடந்த 11 ஆண்டுகளில் நாடு வேளாண்மையில் பெரிய மாற்றம் கண்டுள்ளது. வருங்காலத்தில் வேளாண் பெரிய அளவில் வளர்ச்சி அடையும். விவசாயத்தை நவீனப்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. நாட்டில் அனைத்து விவசாயிகளுக்கும் மொத்தமாக 18000 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இயற்கை வேளாண்மை செய்ய விவசாயிகளை மத்திய அரசு ஊக்கப்படுத்தி வருவதாக கூறினார். ரசாயனபுரங்கள் பூச்சிக்கொல்லிகளால் நிலத்தின் வளம் வீழ்ச்சி காண்கிறது என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: #BREAKING: கோவை வந்தடைந்தார் பிரதமர் மோடி... உற்சாக வரவேற்பு... உச்சகட்ட பாதுகாப்பு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share