×
 

குண்டு வெடிப்பு பயங்கரம்..! சதிகாரர்கள் தண்டிக்கப்படுவது உறுதி... பிரதமர் மோடி திட்டவட்டம்...!

டெல்லி குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து சதிகாரர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்தார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அண்டை நாடான பூடானுக்கு இரண்டு நாட்கள் அரசு முறைப் பயணமாக இன்று காலை டெல்லியிலிருந்து புறப்பட்டுச் சென்றார். பூடான் தலைநகர் திம்புவில் உள்ள பாரோ விமான நிலையத்தில் அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே நேரில் சென்று பிரதமர் மோடியை வரவேற்றார்.

விமான நிலையத்தில் பூடான் மக்கள், குழந்தைகள் உட்பட பலரும் கைகளில் இந்திய-பூடான் கொடிகளை ஏந்தி, பாரம்பரிய நடனங்களுடன் உற்சாகம் காட்டினர். இந்தப் பயணம், இரு நாடுகளுக்கிடையேயான நீண்டகால நட்பையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்தும் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் இந்தப்பயணம் குறித்து பதிவிட்டுள்ளார். "பூடான் நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வேன். பூடான் மன்னருடன் உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவேன். இந்தப் பயணம் நமது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பயணம் இந்தியாவின் அண்டை நாடுகள் முதல்நிலை கொள்கையின் ஒரு முக்கிய அங்கமாகும்.

இதையும் படிங்க: கோவாவில் வெற்றிகரமாக நிறைவுற்ற அயர்ன்மேன் 70.3..!! இளைஞர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!!

டெல்லியில் கார் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. நாடு முழுவதும் பெறும் பதற்றத்தை இந்த சம்பவம் உருவாக்கி இருக்கிறது. தீவிரவாத தாக்குதலா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. பூட்டானில் செங்கோட்டை பயங்கரம் குறித்து பிரதமர் மோடி பேசினார். அப்போது, சதிக்காரர்கள் நீதியின் முன் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறினார். சதி செயலில் வேர்வரை விசாரணை நடத்தி உண்மைகளை கண்டு பிடிப்போம் என்று உறுதியளித்தார்.

இதையும் படிங்க: தலைநிமிர வைத்த இந்திய பெண்கள் அணி..!! நாளை நேரில் அழைத்து வாழ்த்துகிறார் பிரதமர் மோடி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share