×
 

இன்று மாலை நாட்டு மக்களிடம் உரையாற்றும் பிரதமர்.. அதிமுக்கிய பிரச்சனைகள் குறித்து பேசுவார் என எதிர்பார்ப்பு..!

ஜி.எஸ்.டி சீர்திருத்தங்கள் நாளை அமலாகும் நிலையில் பிரதமர் மோடி இன்று மாலை நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார்.

அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் (GST 2.0) என அழைக்கப்படும் இந்த புதிய சீர்திருத்தங்கள், பிரதமர் நரேந்திர மோடியின் 79வது சுதந்திர தின உரையில் அறிவிக்கப்பட்டவை. இவை பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு ஆதரவளிக்கவும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

தற்போதைய ஜிஎஸ்டி அமைப்பில் 5%, 12%, 18% மற்றும் 28% என நான்கு முக்கிய வரி அடுக்குகள் உள்ளன. இவை மிகவும் சிக்கலானவை எனக் கருதப்பட்டு, புதிய சீர்திருத்தங்களின் மூலம் இரண்டு முக்கிய அடுக்குகளாக (5% மற்றும் 18%) குறைக்கப்பட உள்ளன. இதனால், 12% அடுக்கில் உள்ள 99% பொருட்கள் 5% அடுக்கிற்கும், 28% அடுக்கில் உள்ள 90% பொருட்கள் 18% அடுக்கிற்கும் மாற்றப்படும். இந்த மாற்றம், பொருட்களின் விலையைக் குறைத்து, பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும்.

மேலும், புகையிலை, பான் மசாலா, சர்க்கரை கலந்த கார்பனேற்றப்பட்ட பானங்கள், ஆடம்பர கார்கள் போன்ற பொருட்கள் மற்றும் ஆடம்பர பொருட்களுக்கு 40% என்ற புதிய வரி அடுக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த ஜி எஸ் டி சீர்திருத்தம் வெறும் விலை குறைப்பு மட்டும் அல்ல என்றும் இது ஒரு புரட்சி எனவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார். பிரதமர் மோடியின் தீபாவளி பரிசு என்றும் இதனை தெரிவித்தார்.

இதையும் படிங்க: மறுபடியும் சொல்றேன்.. வீக்கான பிரதமர்: H1B விசா விவகாரத்தை சுட்டிக்காட்டி ராகுல் காந்தி விமர்சனம்..!!

இதனிடையே, நாளை முதல் இந்த ஜிஎஸ்டி மாற்றம் அமலுக்கு வர உள்ளது. இந்த நிலையில் இன்று மாலை 5:00 மணி அளவில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார். அப்போது ஜிஎஸ்டி சேர்த்திருத்தம் தொடர்பாகவும் ஹெச் ஒன் பி விசா தொடர்பாகவும் அவர் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ரவுடிகள் அட்டகாசம்… திரும்பி பாருங்க உங்க கட்சிக்காரர் தான்! முதல்வரை சாடிய அண்ணாமலை

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share