அமித் ஷா சீக்ரெட் ஆப்ரேஷன் சக்சஸ்!! தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி! 3 நாள் விசிட்!
டெல்டா மாவட்டமான தஞ்சாவூரில், ஜனவரி மாதம் நடக்கும் பொங்கல் பண்டிகை விழாவில், பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் 2026ஆம் ஆண்டு ஏப்ரலில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலை முன்னிட்டு முக்கிய அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. தி.மு.க. கூட்டணியை வலுப்படுத்த புதிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதேபோல் அ.தி.மு.க.வும் கூட்டணியை பலப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
பீஹாரில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தமிழகத்திலும் வெற்றி பெற வேண்டும் என பா.ஜ.க. தேசிய தலைமை விரும்புகிறது. இதற்காக டெல்லியில் உத்திகள் வகுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, தமிழகத்தில் விவசாய சங்கங்கள், தொழிலாளர் அமைப்புகள், வியாபாரிகள் போன்றோரை அணிதிரட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் (ஜனவரி 13 முதல் 15 வரை) மூன்று நாள் பயணமாக தமிழகம் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்பயணத்தில் விவசாயிகளுடன் சேர்ந்து பொங்கல் பண்டிகையை கொண்டாட உள்ளதாக பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: திமுகவை கடுப்பேத்தும் பாஜகவின் ‘சூப்பர் பிளான்’! டெல்லி வரை பறக்கும் ரிப்போர்ட்! “மாஸ்டர் ஸ்ட்ரோக்”!
காவிரி டெல்டா பகுதியில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ள தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக சில விவசாய சங்க நிர்வாகிகளை டெல்லிக்கு அழைத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. பொங்கல் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துமாறு தமிழக பா.ஜ.க. தலைமைக்கு தேசிய தலைமை அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிகிறது.
இப்பயணம் தமிழகத்தில் பா.ஜ.க.வின் கிராமப்புற வாக்குவங்கியை வலுப்படுத்தவும், தமிழ் கலாச்சாரத்துடன் இணைக்கவும் உதவும் என கட்சி மூத்த தலைவர்கள் கருதுகின்றனர். மேலும், காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் நிறைவு விழாவிலும் பிரதமர் கலந்துகொள்ள உள்ளார்.
இந்த வருகை 2026 தேர்தலுக்கு முன் பா.ஜ.க.வின் முக்கிய அரசியல் நகர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பிரதமர் மோடி நரகாசுரனா? வன்மம், வன்முறையை வெளிப்படுத்தும் திமுக.. நயினார் ஆவேசம்!