×
 

பிரதமர் மோடியின் UG பட்டம்! விவரங்களை வெளியிடும் உத்தரவுக்கு டெல்லி கோர்ட் தடை..!

பிரதமர் மோடியின் இளங்கலை பட்டம் தொடர்பான விவரங்களை வெளியிட வேண்டும் என்ற உத்தரவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

நரேந்திர மோடி, 1950 செப்டம்பர் 17 அன்று குஜராத்தின் வத்நகரில் பிறந்தவர். அவரது அதிகாரப்பூர்வ வாழ்க்கைக் குறிப்புகளின்படி, அவர் தில்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பையும், பின்னர் குஜராத் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்தவர் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, அவரது இளங்கலை பட்டம் அரசியல் அறிவியலில் தில்லி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் ஒரு கல்லூரியில் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவல் பிரதமர் அலுவலகத்தின் இணையதளம் மற்றும் அவரது தேர்தல் பிரமாணப் பத்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.இருப்பினும், 2014ஆம் ஆண்டு மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு, அவரது கல்வித் தகுதி குறித்து சில அரசியல் கட்சிகள், குறிப்பாக ஆம் ஆத்மி கட்சி கேள்விகளை எழுப்பின. மோடியின் இளங்கலை பட்டம் உண்மையானதா என்பது குறித்து அவர்கள் சந்தேகம் தெரிவித்தனர். 

அரவிந்த் கெஜ்ரிவால், 2016ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மோடியின் பட்டப்படிப்பு விவரங்களை வெளியிடுமாறு தில்லி பல்கலைக்கழகத்திற்கு கோரிக்கை விடுத்தார். இந்தச் சர்ச்சைக்கு பதிலளிக்கும் வகையில், 2016ஆம் ஆண்டு தில்லி பல்கலைக்கழகம் மோடியின் இளங்கலை பட்டம் குறித்த விவரங்களை உறுதிப்படுத்தியது. 

இதையும் படிங்க: கடைக்காரராக சித்தரிக்கப்பட்ட பிரதமர் மோடி.. தேஜஸ்வி மீது பாய்ந்த FIR..!!

மத்திய தகவல் ஆணையம் 2016ஆம் ஆண்டு தில்லி பல்கலைக்கழகத்திற்கு ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்தது. மோடியின் கல்வி ஆவணங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளியிட வேண்டும் என்று CIC உத்தரவிட்டது. இந்த உத்தரவு, பொது மக்களுக்கு அரசியல் தலைவர்களின் கல்வித் தகுதி குறித்த தகவல்களை அறிய உரிமை உள்ளது என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது. 

இந்த நிலையில் பிரதமர் மோடியின் இளங்கலை பட்டம் தொடர்பான விவரங்களை வெளியிட வேண்டும் என்ற உத்தரவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இதையும் படிங்க: 2035ல் இந்தியாவின் "SPACE STATION"... இஸ்ரோ தலைவர் நாராயணன் உறுதி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share