"பண்டிகை சீசனில் இதை மறக்காதீங்க!" - காதி, கைத்தறிப் பொருட்களை வாங்கப் பிரதமர் மோடி வேண்டுகோள்!
இனி வரும் பண்டிகை சீசனில், காதி, கைத்தறி, கைவினைப்பொருட்களில் ஏதேனும் ஒன்றை கட்டாயம் வாங்கும்படி, மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பண்டிகை காலத்தில் நாட்டின் நெசவாளர்கள் மற்றும் கைவினைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில், ஒவ்வொரு குடும்பத்தினரும் காதி, கைத்தறி அல்லது கைவினைப்பொருட்களில் ஏதேனும் ஒன்றை கட்டாயம் வாங்க வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மாதம்தோறும் ஒளிபரப்பாகும் 'மன் கி பாத்' (Mann Ki Baat) வானொலி நிகழ்ச்சியின் வாயிலாக இன்று நாட்டுமக்களிடையே உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, உள்நாட்டு தயாரிப்புகள் மற்றும் உள்ளூர் கைவினைப் கலைஞர்களின் முக்கியத்துவம் குறித்துப் விரிவாகப் பேசினார். "வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி நாடு முழுவதும் தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்படவுள்ளது" என்று குறிப்பிட்ட அவர், தலைமுறை தலைமுறையாக இந்தியாவின் பண்பாட்டுப் பாரம்பரியத்தையும் கலைகளையும் பாதுகாத்து வரும் நெசவாளர் சகோதர சகோதரிகளின் திறமைகளைப் போற்றும் நாளாக இது திகழ்கிறது என்றார்.
மேலும், நாட்டின் பொருளாதாரத்தில் காதி பொருட்களின் பங்களிப்பு குறித்துப் பேசிய பிரதமர், "மகாத்மா காந்திக்கு மிகவும் உகந்த காதி பொருட்கள், கடந்த சில ஆண்டுகளில் மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. கடந்த 12 ஆண்டுகளில் காதி பொருட்களின் விற்பனை 6 மடங்கு அதிகரித்து, தற்போது சுமார் ₹8,000 கோடி என்ற பிரம்மாண்ட நிலையை எட்டியுள்ளது.
இதையும் படிங்க: கிருஷ்ணகிரியில் 3.0 ரிக்டர் நிலநடுக்கம்... "மக்கள் அச்சப்பட வேண்டாம்" - மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்!
எனவே, வரவிருக்கும் பண்டிகை காலத்தில் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களில் குறைந்தபட்சம் ஒரு காதி, கைத்தறி அல்லது உள்நாட்டு கைவினைப்பொருளையாவது வாங்கி, 'உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம்' (Vocal for Local) என்ற இலட்சியப் பயணத்திற்கு மேலும் வலு சேர்க்க வேண்டும்" என உருக்கமாகக் கேட்டுக் கொண்டார்.
இதையும் படிங்க: துரோகிகளுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.. அக்ரி கிருஷ்ணமூர்த்தி எச்சரிக்கை!