×
 

ராமதாஸ் உட்காரும் இடத்தில் ஒட்டு கேட்கும் கருவி... தைலாபுரத்தில் கைவரிசை காட்டியது இவரா? - பகீர் குற்றச்சாட்டு...!

ஒட்டு கேட்கும் கருவி என் வீட்டிலேயே நான் உட்காரும் இடத்தில் இருந்தது. அதை யார் வைத்தார்கள், எதற்காக வைத்தார்கள் என ஆராய்ந்து வருகிறோம் என பாமக நிறுவனர் ராமதாஸ் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 

ஒட்டு கேட்கும் கருவி என் வீட்டிலேயே நான் உட்காரும் இடத்தில் இருந்தது. அதை யார் வைத்தார்கள், எதற்காக வைத்தார்கள் என ஆராய்ந்து வருகிறோம் என பாமக நிறுவனர் ராமதாஸ் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 

கடலூர் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் வன்னியர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் விருத்தாசலம் ராணி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், தனது வீட்டில் யாரோ ஒட்டு கேட்கும் கருவியை வைத்துள்ளனர். இது லண்டனில் இருந்து வந்துள்ளதாக குற்றச்சாட்டு வைத்துள்ளார். இதுகுறித்து விசாரணை செய்து வருவதாக அவர் பத்திரிகைகளிடம் கூறியிருந்தார்.  இரண்டு தினங்களுக்கு முன்பு தனது வீட்டில் யாரோ வந்து ஒட்டு கேட்கும் கருவி வைத்துள்ளார் என சொல்லியிருக்கிறார். 

தனது வீட்டில்  எனது அறையில் வந்து சோபா கீழே ஒட்டு கேட்கும் கருவி வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டியுள்லார்.  அதை யார் வைத்தார்கள் என்று விரைவில் கண்டுபிடிப்போம் என்று செய்தியாளர்களிடம் கூறியது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அப்பொழுது தனது பெயரை வந்து யாரும் பயன்படுத்த கூடாது என்று தங்களுடைய பெயரில் இன்ஷிலை மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், அதற்கு  தனது மகனை இன்ஷிலை மட்டும் பயன்படுத்திக் கொள்ளக் கூறியதாக தெரிவித்தார். 

இதையும் படிங்க: தேவைப்பட்டால் இனிஷியல் போட்டுக்கொள்... தன் பெயரை அன்புமணி பயன்படுத்தக் கூடாது! ராமதாஸ் தடாலடி..!

நேற்று (ஜூலை 10-ஆம் தேதி) கும்பகோணத்தில் நடைபெற்ற பாமக மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில், “என் பேச்சை மதிக்காதவர்கள் என் பெயரைப் பயன்படுத்தக் கூடாது. தேவைப்பட்டால் இனிஷியல் மட்டும் போட்டுக்கொள்ளட்டும்” எனக் கடுமையாக ராமதாஸ் பேசினார். இதனையடுத்து அன்றைய தினம் இரவு 7.45 மணி அளவில் தைலாபுரம் தோட்டத்து வீட்டிற்குச் சென்ற அன்புமணி, அவருடைய அம்மாவைச் சந்தித்து உடல் நலம் விசாரித்துள்ளார். அதன் பின்னர் அவர் கையால் பரிமாறிய டிபனைச் சாப்பிட்டு விட்டு, ஓமந்தூரில் நடந்த பிஏ நடராஜன் இல்ல திருமண விழாவில் பங்கேற்க சென்றுவிட்டார். 

நேற்று ராமதாஸ் இல்லாத நேரத்தில் அன்புமணி தைலாபுரம் தோட்டத்து வீட்டிற்குச் சென்றது பரபரப்பைக் கிளப்பிய நிலையில், தற்போது யாரோ என் வீட்டில் எனது அறையில் சோபாவிற்கு கீழே ஒட்டு கேட்கும் கருவியை பொருத்திவிட்டார்கள் என ராமதாஸ் குற்றச்சாட்டியிருப்பது பாமகவில் பெரும் பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது. 

இதையும் படிங்க: என் பொண்ணு ஶ்ரீகாந்திக்கு இப்போதைக்கு பதவி இல்ல.. ஆனா அப்புறம்? ட்விஸ்ட் வைத்த ராமதாஸ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share