புதுச்சேரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு..! ஜுன் 1-ல் தொடக்கம்..!
புதுச்சேரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பு, அதாவது 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு, இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதன் முதல் கட்டமான வீடு பட்டியலிடுதல் மற்றும் வீட்டு வசதி கணக்கெடுப்பு ஏப்ரல் 1, 2026 முதல் செப்டம்பர் 30, 2026 வரை நாடு முழுவதும் படிப்படியாக தொடங்கி நடைபெறுகிறது.
இது இந்தியாவின் வரலாற்றில் முதல் முறையாக முழுமையாக டிஜிட்டல் முறையில் நடைபெறும் கணக்கெடுப்பு ஆகும். கணக்கெடுப்பாளர்கள் மொபைல் ஆப் மூலம் தரவுகளை சேகரிப்பார்கள், மேலும் பொதுமக்கள் சுயமாக தங்கள் விவரங்களை இணையதளம் வழியாக பதிவு செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த முதல் கட்டத்தில் 33 கேள்விகள் அடங்கிய பட்டியல் பயன்படுத்தப்படுகிறது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு சிறப்பு அட்டவணை வகுக்கப்பட்டுள்ளது. ஜம்மு & காஷ்மீர், லடாக் ஆகிய பகுதிகளுடன் சேர்த்து, புதுச்சேரியில் சுய விவர பதிவு மே 17 முதல் மே 31, 2026 வரை நடைபெறும். அதன் பிறகு, வீடு தேடி வரும் நேரடி கணக்கெடுப்பு ஜூன் 1 முதல் ஜூன் 30, 2026 வரை 30 நாட்கள் நடைபெறும்.
இதையும் படிங்க: புதுச்சேரி மக்களே..! விழிப்புடன் வாக்களியுங்கள்..! தவெக தலைவர் விஜய் வேண்டுகோள்..!!
இதன் மூலம் புதுச்சேரியில் உள்ள ஒவ்வொரு வீடும், குடும்பமும், அவற்றின் வசதிகள், கட்டமைப்பு உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்படும். இரண்டாவது கட்டமான மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 பிப்ரவரி மாதத்தில் நடைபெறும். இதில் ஒவ்வொரு தனி நபரின் விவரங்கள், வயது, பாலினம், கல்வி, தொழில், மொழி, சமூக-பொருளாதார நிலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் சேகரிக்கப்படும். இந்த முறை சாதி வாரியான கணக்கெடுப்பும் முதல் முறையாக 1931க்குப் பிறகு இணைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வந்தாச்சு எலெக்ஷன்..! கேரளம், அசாம், புதுவையில் தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் ஓய்வு..!