உயிருக்கே ஆபத்து... புதுச்சேரியில் பட்டாசு தயாரிக்க தடை... அதுவே இந்த நேரங்களில் கூடவே கூடாதாம்...!
கோடை வெப்பத்தின் தாக்கம் காரணமாக புதுச்சேரியில் காலை 11 மணி முதல் மாலை மூன்று மணி வரை பட்டாசு தயாரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலைகள் கிடையாது. இருப்பினும் கிராம பகுதியான அரியாங்குப்பம், திருக்கண்ணூர், பூனிச்சம்பட்டு, செட்டிப்பட்டு சுத்துக்கேணி பகுதியில் நாட்டுப் பட்டாசு தயாரிக்கப்படுகிறது. இந்த இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முறையாக எடுக்கப்பட்டுள்ள உள்ளதா என போலீசார் தீவிர சோதனை செய்தனர். இதில் திருக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமார் தலைமையிலான போலீசார் திருக்குனூர், குனிச்சம்பட்டு, சுத்துக்கேனி செட்டிப்பட்டு பகுதியில் பட்டாசு செய்யும் இடங்களுக்கு சென்று பாதுகாப்புடன் பட்டாசுகளை தயாரிக்க வேண்டும். பாதுகாப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தனர்.
மேலும் புதுச்சேரியில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை பட்டாசு தயாரிக்கும் பணியை செய்ய வேண்டாம் என
அறிவித்தனர். இந்த நேரத்தில் நீங்கள் பட்டாசு தயாரித்தால் கட்டாயம் விபத்து ஏற்படும். அதை முன்னிட்டு தான் உங்களுக்கு இந்த கோரிக்கை வைக்கிறோம். எனவே காலை11 மணியிலிருந்து மாலை மூணு மணி வரைக்கும் பட்டாசு தயாரிக்க கூடாது என்று அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
கோடை வெப்பம் காரணமாக பட்டாசு தயாரிக்கும் மூலப்பொருட்களை கையாளும் போது வெடி விபத்து ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில் விருதுநகர் மாவட்டம் வாச்சக்காரப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கட்டனார்பட்டி பகுதியில் முத்துமாணிக்கம் என்பவருக்கு சொந்தமான வனஜா பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 25 பேர் உயிரிழந்தனர். இதற்கு மூலப்பொருட்களை கலக்கும் போது ஏற்பட்ட ரசாயன மாற்றம் காரணமாக இருக்கலாம் எனக்கூறப்படுகிறது.
இதையும் படிங்க: வாக்குப்பதிவு அதிகரிக்கல..! SIR தான் காரணம்..! திருமாவளவன் கொடுத்த விளக்கம்..!!
அடுத்ததாக கடந்த 22ம் தேதி கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் முண்டத்திகோட் பகுதியில் இருந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 13 பேர் உடல் கருகி பலியாகினர். அப்போதைய விசாரணையின் போது, பட்டாசு ஆலை அறுவடைக்குப் பிறகு காய்ந்த நெல் வயலில் இருந்ததும், அதிக வெப்பமும் காரணமாக கூறப்பட்டது. இதுபோன்ற அடுத்தடுத்த கோர விபத்துக்களை தடுக்கும் நோக்கத்திலேயே புதுச்சேரி காவல்துறையினர் முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "ஒரிஜினல் எப்போதும் ஒரிஜினல்தான்" BRS-க்கு போட்டியா TRS? சந்திர சேகர் ராவ் மகளுக்கு பதிலடி!