×
 

101-ஆவது பிறந்தநாள்!! அடல் பிகாரி வாஜ்பாய் நினைவிடத்தில் மோடி, முர்மு மரியாதை!

முன்னாள் பிரதமா் அடல் பிகாரி வாஜ்பாயின் பிறந்த நாளையொட்டி அவரது நினைவிடத்தில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

புது டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் பாரத ரத்னா அடல் பிகாரி வாஜ்பாயின் 101-வது பிறந்தநாள் இன்று (டிசம்பர் 25, 2025) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி தில்லியில் உள்ள 'சதைத் ஸ்மிருதி ஸ்தல்' நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாஜ்பாய் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

அடல் பிகாரி வாஜ்பாய் மூன்று முறை இந்தியப் பிரதமராக பதவி வகித்தவர். அவரது ஆட்சிக் காலத்தில் போக்ரான் அணு சோதனை, தங்க நாற்கர சாலைத் திட்டம், கிராமப்புற வளர்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட பல முக்கிய முன்னெடுப்புகள் செயல்படுத்தப்பட்டன. சிறந்த பேச்சாளர், கவிஞர், தேசப்பற்றாளர் என்று புகழ்பெற்ற வாஜ்பாய் 2018 ஆகஸ்ட் 16-ம் தேதி காலமானார்.

இதையும் படிங்க: ரூ.230 கோடியில் தேசிய நினைவிடம்!! தாமரை வடியில் அதிநவீன அருங்காட்சியகம்! இன்று மோடி திறந்து வைப்பு!

முன்னதாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: "வாஜ்பாய்ஜியின் பிறந்தநாள் அவரது வாழ்க்கையிலிருந்து உத்வேகம் பெறுவதற்கான சிறப்பான நாள். அவரது நடத்தை, கண்ணியம், சித்தாந்த உறுதி, தேச நலன், உறுதி ஆகியவை இந்திய அரசியலுக்கு சிறந்த முன்மாதிரி. 

பதவியால் அல்ல, நடத்தையால்தான் சிறப்பு நிலைநாட்டப்படுகிறது என்பதை அவர் நிரூபித்தார். நல்லாட்சி, தேசக் கட்டமைப்புக்கு தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர். சிறந்த சொற்பொழிவாளர், உற்சாகக் கவிஞர் என்றும் நினைவுகூரப்படுவார்" என்று புகழாரம் சூட்டினார்.

நாடு முழுவதும் பாஜகவினர் வாஜ்பாய் பிறந்தநாளை 'சுஷாசன் திவஸ்' (நல்லாட்சி நாள்) என்று கொண்டாடினர். பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. வாஜ்பாயின் கொள்கைகள் இன்றும் இந்திய அரசியலுக்கு வழிகாட்டியாக உள்ளன என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

இதையும் படிங்க: ரூ.230 கோடியில் தேசிய நினைவிடம்!! தாமரை வடியில் அதிநவீன அருங்காட்சியகம்! இன்று மோடி திறந்து வைப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share