போட்ஸ்வானாவுக்கு முர்மு செய்து கொடுத்த ப்ராமிஸ்!! இந்தியா வரும் 8 சிவிங்க புலிகள்!
அரசுமுறைப் பயணமாக போட்ஸ்வானா நாட்டிற்கு சென்றுள்ள நம் ஜனாதிபதி திரவுபதி முர்மு, எட்டு சிவிங்கி புலிகளை இடமாற்றம் செய்யும் திட்டத்தை இறுதி செய்தார்.
இந்தியாவின் முதல் ஜனாதிபதியாக ஆப்ரிக்க நாடுகளான அங்கோலா மற்றும் போட்ஸ்வானாவுக்கு ஆறு நாட்கள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள டிராபதி முர்மு, இரு நாடுகளுடனும் உறவுகளை வலுப்படுத்தியுள்ளார். இது இந்திய தலைவர்களின் முதல் பயணம் என்பதால், வர்த்தகம், பாதுகாப்பு, வனவிலங்கு பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.
நவம்பர் 8 அன்று அங்கோலாவின் தலைநகர் லுவாண்டாவை அடைந்த ஜனாதிபதி முர்மு, சிவப்பு கம்பள வரவேற்பு பெற்றார். அங்கோலா அதிபர் ஜோவா மேனுவேலோவை சந்தித்து, இரு நாடுகள் இடையே ராணுவம், எரிசக்தி பாதுகாப்பு, விவசாயம், பெட்ரோலிய சுத்திகரிப்பு உள்ளிட்ட துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
இந்தியாவின் எரிசக்தி இறக்குமதி மற்றும் அரிய தாதுக்களைப் பற்றியும் விவாதங்கள் நடைபெற்றது. ஜனாதிபதி முர்மு, அங்கோலாவின் 50வது சுதந்திர தின விழாவிலும் பங்கேற்று, இந்தியாவின் ஆப்ரிக்க உறவுகளை வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: ஆப்ரிக்க நாடுகளில் 6 நாள் சுற்றுப்பயணம்!! போட்ஸ்வானா சென்ற முர்முவுக்கு உற்சாக வரவேற்பு!!
ஜனாதிபதி முர்மு கூறியதாவது: “போட்ஸ்வானா மக்கள், சிவிங்கி புலிகளை இந்தியாவிற்கு அனுப்புவதற்கு நன்றி. நாங்கள் அவற்றை நன்றாக கவனித்துக்கொள்வோம்” என்றார். இந்தியாவில் 1952 ஆம் ஆண்டு அழிந்துபோன சிவிங்கி புலி இனத்தை மீட்டெடுக்கும் இத்திட்டத்தின் கீழ், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நமீபியா, தென்னாப்ரிக்கா போன்ற நாடுகளிலிருந்து புலிகள் கொண்டு வரப்பட்டன.
கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கிய இத்திட்டத்தின்படி, மத்திய பிரதேசத்தின் குனோ உயிரியல் பூங்காவில் தற்போது 27 சிவிங்கி புலிகள் வசிக்கின்றன. போட்ஸ்வானாவிலிருந்து வரும் 8 புலிகள், குவாரன்டைன் நடைமுறைகளுக்குப் பிறகு சில மாதங்களில் இந்தியாவை அடையும்.
இந்த பயணம், இந்தியாவின் ஆப்ரிக்க உறவுகளை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இரு நாடுகளுடனும் வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் புதிய கூட்டு வாய்ப்புகள் உருவாகும். இந்தியாவின் ஆப்ரிக்க வணிக சமூகம், போட்ஸ்வானாவுடன் கூட்டு முதலீடுகளை செய்யும் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி முர்முவின் இந்த பயணம், இந்தியாவின் உலகளாவிய உறவுகளை வலுப்படுத்தும் மைல்கல்லாக அமையும்.
இதையும் படிங்க: அம்மாடியோவ்!! ரூ.50,000 கோடி மோசடி!! லண்டனில் சிக்கிய சீனாவின் 'கிரிப்டோ' ராணி!!