×
 

மகாத்மா காந்தி என் குடும்பம் கிடையாது!! ஆனாலும்! பார்லி-யில் ப்ரியங்கா காந்தி ஃப்யர் பேச்சு!

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தை மாற்றுவதற்கு காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி மக்களவையில் கடும் எதிர்ப்பு தெரிவித்துப் பேசினார்.

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தை (எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.ஏ) மாற்றும் வகையில் மத்திய அரசு புதிய மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளது. 

“விக்சித் பாரத் – கிராமின் ரோஸ்கர் அண்ட் அஜீவிகா மிஷன் கியாரண்டி (VB-G RAM G) மசோதா 2025” என்ற பெயரில் கொண்டுவரப்பட்ட இந்த மசோதாவை மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் டிசம்பர் 16-ஆம் தேதி மக்களவையில் அறிமுகம் செய்தார்.

இந்த மசோதா ஊரக குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 125 நாட்கள் வேலைவாய்ப்பு உறுதி அளிக்கிறது. தற்போதைய 100 நாட்களில் இருந்து 25 நாட்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஊரக உள்கட்டமைப்பு, நீர் பாதுகாப்பு, வாழ்வாதார மேம்பாடு போன்றவற்றை மையப்படுத்தியுள்ளது. ஆனால், மத்திய அரசு முழு நிதியும் வழங்கி வந்த நிலையில், இனி மாநில அரசுகள் 40 சதவீத நிதியை ஏற்க வேண்டும் என்று மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 100 நாள் இல்லை… இனி 125 நாள்!! பார்லியில் புதிய மசோதா தாக்கல்!! சிறப்பம்சங்கள் என்ன?

இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி மக்களவையில் பேசுகையில், “மகாத்மா காந்தியின் பெயரை நீக்குவது ஏன்?

அதிக வேலை நாட்கள், அதிக ஊதியம் என்று கூறி மக்களை ஏமாற்றுகிறீர்கள். இந்த மசோதா கிராம பஞ்சாயத்துகளின் அதிகாரத்தை பலவீனப்படுத்துகிறது. உரிமை அடிப்படையிலான திட்டத்தை பலவீனமாக்குகிறது. அவையின் ஆலோசனையின்றி அவசரமாக நிறைவேற்றக் கூடாது. மசோதாவை திரும்பப் பெறுங்கள்; நிலைக் குழுவுக்கு அனுப்புங்கள்” என்று வலியுறுத்தினார்.

மேலும், “மகாத்மா காந்தி என் குடும்ப உறுப்பினர் அல்ல, அவர் தேசத்தின் உணர்வு. பாரபட்சத்தால் எந்த மசோதாவும் நிறைவேற்றப்படக் கூடாது” என்று கூறினார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா, “திட்டப் பெயரை மாற்றுவதால் என்ன பலன்? காந்தி பெயரை நீக்குவது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார்.

திமுக எம்.பி. டி.ஆர். பாலு உள்ளிட்டோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மசோதா அறிமுகத்தின்போது அமளி ஏற்பட்டதால் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பார்லிமென்ட் வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.

அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், “மகாத்மா காந்தியை நம்புவது மட்டுமல்ல, அவரது கொள்கைகளையும் பின்பற்றுகிறோம். ஆனால், கிராம வளர்ச்சிக்காகவே மோடி அரசு அதிகம் செய்துள்ளது” என்று பதிலளித்தார்.

இந்த மசோதா ஊரக ஏழைகளின் உரிமையை பாதிக்கும் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. மசோதா மீதான விவாதம் தொடர்கிறது.

இதையும் படிங்க: 100 நாள் இல்லை… இனி 125 நாள்!! பார்லியில் புதிய மசோதா தாக்கல்!! சிறப்பம்சங்கள் என்ன?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share