×
 

தலை விரித்தாடும் சிலிண்டர் பிரச்சனை... நாடாளுமன்ற வளாகத்தில் எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம்..!!

சிலிண்டர் தட்டுப்பாட்டை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தியாவில் தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு என்ற பிரச்சினை மீண்டும் தலைதூக்கியுள்ளது. இது உலக அளவிலான புவிசார் அரசியல் நெருக்கடியால் ஏற்பட்டுள்ள ஒரு பெரிய தாக்கம். முக்கிய காரணம் மேற்காசியாவில் ஏற்பட்டுள்ள போர்ச்சூழல். ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியை மூடியதால், உலகின் மிக முக்கியமான எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்து பாதை தடைபட்டுள்ளது.

இந்தியா தனது LPG தேவையில் சுமார் 60-65% இறக்குமதி செய்கிறது. அதில் 85-90% மேற்காசிய நாடுகளிலிருந்து வருகிறது. இந்த தடையால் இறக்குமதி கணிசமாக குறைந்துள்ளது. இதனால் உலக சந்தையில் LPG விலை உயர்ந்ததோடு, விநியோக சங்கிலியும் பாதிக்கப்பட்டுள்ளது.இந்திய அரசு இதை எதிர்கொள்ள பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. முதலில், அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் அவசர அதிகாரங்களைப் பயன்படுத்தி, அனைத்து சுத்திகரிப்பு நிலையங்களுக்கும் LPG உற்பத்தியை அதிகப்படுத்த உத்தரவிட்டது. வீட்டு உபயோகத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, வணிக உபயோக சிலிண்டர்களின் விநியோகம் பல இடங்களில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் பெங்களூரு, சென்னை, மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களில் ஹோட்டல்கள், உணவகங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. வீட்டு உபயோக சிலிண்டர்கள் கிடைப்பதிலும் பெரும் சிக்கல் நிலவி வருகிறது. இதனால் மக்கள் அள்ளாடி வருகின்றனர்.  ஹோர்முஸ் வழியாக இந்திய கப்பல்களுக்கு நேற்றைய தினம் அனுமதி கொடுக்கப்பட்டது. இருப்பினும் சிலிண்டர் தட்டுப்பாடு பிரச்சனை கட்டுக்குள் வரவில்லை.

இதையும் படிங்க: சபாநாயகர் பேச்சு அவதூறு... முற்றுகையிட்ட காங்கிரஸ் MP-க்கள்..! வீடியோ காட்சி வெளியீடு..!

சிலிண்டர் பிரச்சனை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வரும் சூழ்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கேஸ் தட்டுப்பாட்டுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பியும் கைகளில் பதாகைகளை ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கலந்து கொண்டனர். 

இதையும் படிங்க: +2 மாணவி கொடூர கொலை..! மனசாட்சியே இல்லையா..? செல்வப் பெருந்தகை காட்டம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share