×
 

ரகசியக் காப்பு உரிமையை மீறிய முதல்வர்..? ஊழல் LIST விவகாரம்... கிருஷ்ணமூர்த்தி கேள்வி..!

ஊழல் பட்டியல் இருப்பதாக கூறும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன் என்று கிருஷ்ணமூர்த்தி கேள்வி எழுப்பினார்.

முதலமைச்சர் மேஜையில் ஊழல் ஆதாரத்தோடு மூன்று துறைகளின் கோப்புகள் இருப்பதாக கூறிய நிலையில் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவதின் பின்னணி என்ன என்றும் முதலமைச்சர் பேச்சு ’ரகசியக் காப்பு’ உறுதிமொழியை மீறியது ஆகாதா? எனவும் புதிய தமிழகம் கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பினார்.

அரசியலமைப்புச் சட்டத்தின்படி, முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்கும்போது இரண்டு முக்கிய உறுதிமொழிகளை எடுத்துக் கொள்கின்றனர். ஒன்று, நாட்டின் இறையாண்மையைக் காப்பது; மற்றொன்று, அரசு நிர்வாகம் சார்ந்த அதிமுக்கிய ரகசியங்களை வெளியில் கசியவிடாமல் காப்பது என்று ஆனால், முதலமைச்சர் விஜய், தான் பதவிப் பிரமாணத்தின் போது எடுத்துக்கொண்ட ரகசியக் காப்பு உறுதிமொழியை சட்டமன்றத்திலேயே மீறியிருக்கிறார் எனவும் தெரிவித்தார்.

ஒரு வாரத்திற்கு முன்பு, நிதியமைச்சர் 3 துறைகளை ஆராய்ந்து, அதன் கோப்புகள் எல்லாம் என்னுடைய மேசையில் இருக்கிறது என்று முதல்வர் விஜய் கூறினார். அதை அவர் போகிறப் போக்கில் சொல்லவில்லை. அவை உண்மையில் என் மேசையில் தான் உள்ளன. அத்தனையும் ஆதாரத்தோடு உள்ளன; அதை open பண்ண வச்சுராதீங்க; எதை எப்போ open பண்ணணுமோ, அது அப்போ open ஆகும்” என்று குறிப்பிட்டுப் பேசி இருப்பதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: டேபிள்ல ஃபைல் இருந்தா உடனே ஆக்சன் எடுங்க! முதல்வர் விஜய்க்கு சிபிஎம் சண்முகம் அட்வைஸ்!

முன்கூட்டியே இதுபோன்ற விவகாரங்களைப் பொதுவெளியில் பேசுவதும், நடவடிக்கையை நிலுவையில் வைப்பதும் ஒரு தவறான முன்னுதாரணம் மட்டுமின்றி, ஊழல் செய்தவர்கள் உஷார் ஆவதற்கும், சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துக்கொள்ளவும் வழிவகுக்காதா? அதிகாரப்பூர்வ ரகசியக் காப்பு நடைமுறைகளுக்கு முற்றிலும் முரணானது ஆகாதா? என்றும் கேட்டார்.

இதையும் படிங்க: தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட டெண்டர் விளக்கம்! மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் பேட்டி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share