இடுப்பில் பாய்ந்த குண்டு... துடிதுடித்து பறிபோன உயிர்... பதற வைக்கும் சிசிடிவி காட்சி...!
சோபாவில் இருந்து எழுந்தபோது இடுப்பில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சோபாவில் இருந்து எழும்போது இடுப்பில் வைத்திருந்த துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உறவினர்களிடம் பேசிவிட்டு சோபாவில் இருந்து எழும்போது எதிர்பாராத விதமாக துப்பாக்கி வெடித்துள்ளது. குண்டு உடலைத் துளைத்த நிலையில் சிகிச்சை பலனின்றி அந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாப் மாநிலம் ஃபசில்கா பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஹர்பிரீத் சிங். வெளிநாடு வாழ் இந்தியர் ஆன இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து அண்மையில் தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் உள்ள உறவினர்களிடம் சோபாவில் அமர்ந்தவாறு ஹர்பிரீத் சிங் பேசிக் கொண்டிருந்தார்.
ஹர்பித் சிங் சோபாவில் அமர்ந்திருக்கும் போது தன்னுடைய இருப்பில் துப்பாக்கி குண்டுகள் லோட் செய்யப்பட்ட பிஸ்டலை வைத்திருந்தார். உறவினர்களிடம் பேசிவிட்டு சோபாவில் இருந்து எழுந்திருக்கும் போது அவரது இடுப்பில் வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி தவறுதலாக வெடித்தது. இதை அடுத்து அவரது வயிற்றில் குண்டு பாய்ந்து உள்ளது.
இதையும் படிங்க: உலகம் அழியதான் போகுது... ஆனா கடவுள் POSTPONED பண்ணிட்டாரு... அந்தர் பல்டி அடித்த தீர்க்கதரிசி..!
இதனால் சம்பவ இடத்திலேயே சரிந்த அந்த இளைஞரை மீட்டு சிகிச்சைக்காக உறவினர்கள் அனுமதித்துள்ளனர். இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்து உள்ளார். உயிரிழந்த அவருக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இடுப்பில் வைத்திருந்த துப்பாக்கி குண்டு பாய்ந்து இளைஞர் உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: "We're the biggest fugitives"..!! இந்தியாவை கிண்டல் செய்த லலித்மோடி..!! வைரலாகும் வீடியோ..!!